பெண்கள் கடவுளின் அழகான படைப்பு. அவர்களை சுற்றியுள்ள உலகத்தை அழகாகவும் மேலும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கு அவர்களால் மட்டுமே முடிகிறது. இன்று உலகின் மக்கள் தொகை 7 மில்லியனுக்கு அதிகம். Covid19 இனால் குறைந்திருக்கலாம். ஆனால் மனித நிலவுகைக்கு பெண்ணின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றல் மிகையாகாது. மேலும் மனிதன் வாழ இந்த பூமியை சிறந்த இடமாக மாற்றுவதும் அவள் தான். பெண்கள் கல்வி,வியாபாரம்,டெக்னாலஜி,மருத்துவம்,விண்வெளி,வனவிலங்கு,ஜெனலிசம் மற்றும் அரசியலில் கூட தமது அடையாளத்தை பதித்துள்ளனர்.

இன்றைய பெண்கள் சமையலறையின் நான்கு சுவர்களை தாண்டி அமைதியாக வெற்றியை நோக்கிய தன் பயணத்தை தொடர்கிறார்கள். ஆணாதிக்க சமுதாயத்தில் இன்று அவள் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி கொண்டு வருகிறாள். ஒரு பெண் மற்ற பெண்ணிடமிருந்து வேறுபடுத்தும் சில அற்புதமான விஷயங்கள்,பண்புகள் அல்லது குணங்கள் உள்ளன.
<01.கருணை மற்றும் அழகின் சுருக்கம்>
கருணை மற்றும் அழகின் பிறப்பிடம் பெண்கள். கடந்த காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி ஏராளமான பெண்கள்தான் ஆண்கள்,கவிஞர்,போர்வீரர்கள் மற்றும் ஆழும் வர்க்கத்தின் கற்பனையாக இருந்திருக்கிறார்கள்.கிளியோபாட்ரா,ராணி சம்யுக்தா, ராணி பத்மாவதி,நூர்ஜஹான்,லேடி கோடிவா,joan of arc போன்ற பல பெண்களின் அழகு நாட்டுப்புறக் கதைகளால் வரலாற்றை அலங்கரித்து வருகிறது. MISS UNIVERSE ,MISS WORLD மற்றும் இன்னும் பல விரும்பத்தக்க தலைப்புகளால் அவள் அழகை வெளிப்படுத்தி வருகிறாள்.
<02.புத்திசாலித்தனம் மற்றும் அறிவின் சேர்க்கை >
பெண்களுக்கு அழகிய தோற்றம் மட்டும் கிடைக்கவில்லை, புத்திசாலித்தனம் மிக்க சிந்தையை கொண்ட மூளையும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.லேடி கார்கி ,லோபமுத்ரா,ஹைபதியா மற்றும் மேரி கியூரி போன்ற பல புத்துஜீவன்கள் அன்றைய காலத்திலும் இருந்தனர்.இன்னும் இன்றும் பலர் உருவாகி வருகிறார்கள். கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், விஜய் லெட்சுமி பண்டிட்,மேரி வொர்னாக்,மலாலா யூஸுப்,அநோகா பிரிம்ரோஸ் என்று அந்த பட்டியல் தொடரும்……
<03.சிறந்த தொடர்பாளர்>
இன்றைய பெண்கள் தங்கள் மனதில் பட்டதை பேசுவதில் வெக்கப் படுவதில்லை. அதுனாலே வாயாடிகள் என்றும் திட்டு வாங்குவதும் உண்டு. ஆனால் சிறந்த தொடர்பாளர்கள், அற்புதமான பேச்சாளர்கள் பென்ன்கள் தான்.பெண்களின் ஈர்க்கக்கூடிய ஆளுமை மற்றும் சொற்பொழிவு களின் காரணமாக மக்களுடன் சிறந்த தொடர்பாடல் கொள்ளும் திறன் பெண்களுக்கு இயல்பாகவே இருக்கிறது.ஒரு பெண் தன் சக ஆண் ஊழியருடன் ஒப்பிடும் போது மிகக் சிறந்த தொடர்பாடல் திறனை கொண்டு இருப்பாள்.உலகெங்கிலும் உள்ள பல கம்பனிகள் அதிக எண்ணிக்கையிலான பெண்களை தங்கள் HR மற்றும் receptionist பதவிகளில் சேர்பதற்கான முக்கிய காரணம் இதுவே!
<04.தலைமைத்துவ குணங்கள்>
முடிவெடுக்கும் மற்றும் தலைமைத்துவ விஷயங்களில் பெண்கள் சரியாக இருப்பதில்லை என்று இன்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது உள்ள சர்வே உலகில் பெண் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் நாடுகளில் இந்த covid 19 மிக நல்ல முறையில் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும். அந்த நாட்டின் தலைவிகள் மிக சிறப்பாக செயற்ப்பட்டு வருகிறார்கள் என சொல்கிறது. அதுமட்டுமல்ல உலகின் வெவ்வேறு பதவிகளில் போற்றத்தக்க தலைமைத்துவ பண்புகளை வெளிக்காட்டிய பெண்கள் உள்ளனர்! ஏஞ்செலா மார்க்கெல்-ஜெர்மனின் அதிபர்,ஜேனட் எல்லேன்- பெடரேல் ரிசெர்வேயின் முன்னாள் தலைவர்,ஹெல் தோர்னிங் ஷ்மிட் -டென்மார்க்கின் பிரதமர்,இந்திரா நூயி -பெப்சிகோவின் CEO , ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க- இலங்கையின் முன்னாள் பிரதமரும் உலகின் முதல் பெண் பிரதமரும் ஆவார். இவர்கள் எல்லோருமே சிறந்த தலைமைத்துவத்தின் உதாரணம் அல்லவா?
<05.சிறந்த நிதி வல்லுநர்கள்>
நிதி விஷயங்களில் பெண்கள் சிறந்தவர்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பட்ஜெட் போட்டு குடும்ப செலவுகளை நிர்வாகம் செய்வதை நாம் ஒவ்வொருவரும் வீட்டில் தினமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையாளர்,துணி வியாபாரி,மளிகை கடை உரிமையாளர் என எல்லோரிடமும் பணக் கொடுக்கல் வாங்கல்களில் எவ்வளவு கராறாகவும் கரெக்டாகவும் நடந்துக் கொள்வார்கள்.குடும்ப செலவுகளை மிக கச்சிதமாகவும் கட்டுப்பாடாகவும் நிர்வகிக்கும் நம் அம்மாக்களை காட்டிலும் உதாரணம் தேவையா என்ன?? இந்த அற்புதமான குணம் தான் ஒவ்வொரு பெண்ணையும் சிறந்த இல்லத்தரசியாக மாற்றுகிறது.
<06.விளையாட்டு >
இந்த உலகில் ஆண்களின் விளையாட்டு திறனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட பெண்களின் விளையாட்டிற்கான முக்கியத்துவம் குறைவு என்றாலும் அதில் சாதித்து வந்த வரும் வர போகிற பெண்களின் பட்டியல் என்னவோ நீளம் தான். பெண் எதுக்கும் துணிந்தவள் என்பதை காட்டும் விதத்தில் ஒவ்வ்வொரு விளையாட்டிலும் சாதித்து வருகிறார்கள் பெண்கள். சுசந்திகா ஜயசிங்க , ஸ்மிருதி மந்தனா,செரினா வில்லியம்ஸ் பி.வி .சிந்து,Sarah Hughes, மேரி கோம் இந்த பட்டியலும் நீண்டு செல்லும்.
பெண் நம் அழகான உலகின் ஒருமுக்கிய அங்கம்.அவளே இந்த உலகை மனிதன் வாழ சிறந்த இடமாக மாற்றி வருகிறாள்.அதற்காக பாடுபடும் அவளை மதித்து அவளது உணர்வுகளுக்கு மதிப்பு வழங்கி வாழ்த்துவோம்.