எண்ணங்கள்தான் செயலாகும் என்பது வெறும் வாய்ச் சொல் அல்ல. அது முற்றிலும் உண்மை. “நீ எதுவாக நினைக்கிறயோ அதுவாகவே ஆகிறாய்”என ஸ்வாமி விவேகானந்தர் இதைதான் சொன்னார். நம் மனதிலில் இருந்து எழும் எண்ணத்திற்கு அவ்வளவு பவர் உள்ளது நண்பர்களே! எண்ணங்கள் இரண்டு வகை. நேர் மறை(பொசிடிவ்) எதிர்மறை(நெகடிவ்) என்பனதான் அவை. எம் எண்ணங்கள் பொசிடிவ்வாக உள்ள போது நம் செயல்களும் பொசிடிவ்வாக இருப்பதோடு நன்மை நமை வந்து சேரும். அப்போ நெகடிவ்வாக இருந்தால் நாங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே புரியும்.நம்ம எவ்ளோ தான் பொசிடிவ்வாக இருக்க ஆசைபட்டாலும் எதாவது தடை வருவது இயற்கை. அந்த தடைகளை எப்படி சமாளித்து பொசிடிவ்வாக எண்ண வேண்டும் என்பதில் தான் நமது வெற்றி இருக்கு. அதுக்கு ஒரு சில டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தான் இங்க நாங்க சொல்லப்போறோம்.

Morning pages

அதாவது காலையிலேயே முக்கியமான வேலைகளை செய்ய முன் உங்களுக்கு அந்த நிமிஷம் மனத்தில் தோன்றும் எண்ணங்களை எழுதி விடுங்கள். இது உங்கள் மனசுமையை குறைப்பதோடு புதிய எண்ணங்கள் தோன்ற வழி கொடுக்கும்.அதே நாளில் மாலையில் அல்லது நாள் முடிவில் அன்றைய நாள் யாராவது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்பட காரணமாக இருந்தார்களா? என்றும் நீங்கள் மற்றவர்களது வாழ்க்கையில் நல்ல மாற்றம் வர உந்துசக்தியாக இருந்தீர்களா என்றும் நினைத்துப் பாருங்கள்.

*Re frame events

அதாவது உங்களை சுற்றி எதாவது நெகடிவ் வைப்ரேஷன் இருக்கும் போது அல்லது உங்களால் எதாவது நெகடிவ்வாக நிகழ்ந்தாலோ உங்களை நீங்களே கேள்விக் கேட்டுப் பாருங்கள்.இது இப்படி நிகழ என்ன காரணம்?…. இதனால் வர கூடிய மோசமான ரியாக்க்ஷன் என்ன?……. நான் இதை செய்ய நோக்கம் என்ன? இதிலிருந்து கிடைக்கும் நன்மை என்ன?…. இதன் மூலம் என்ன கற்றுக் கொண்டேன்?……… என்று உங்களை நீங்களே கேள்விக்கு கேட்டு நடந்த நிகழ்வை மீட்டி பாருங்கள். இதனால் அந்த தவறு மீண்டும் நிகழாமல் இருக்க உங்கள் மூளை முயற்சி செய்யும்.

Re frame thoughts

நம்முடைய மனதிற்கு not,but என்ற சொற்களின் அர்த்தம் தெரியாது. எனவே நெகடிவ் சிந்தனையும் இந்த சொற்களும் சேர்த்து முன் வைக்கும் போது மனதில் அது பொசிடிவ் எண்ணமாக ரெஜிஸ்டர் ஆகிவிடும்!
உ/ம்:I feel so angry with you என்று சொல்லாமல் அல்லது நினைக்காமல் I’m not feeling very happy with you என்று மாற்றிவிடுங்கள்.இது எப்போதும் உங்களையும் உங்கள் சூழலையும் பொசிடிவ் வைப்ரேஷனுக்குள் வைக்கும்.

Spend time in nature

இயற்கை ஒரு அருமருந்து.இயற்கையை சரியாக பாதுகாக்க தவறியதால்தான் இன்று நம்மை சுற்றி இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கிறது.இயற்கையோடு கொஞ்சம் நேரம் செலவிடுங்கள்.இன்று சில நாடுகள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தம் மக்களை விவசாயத்தில் ஈடுபட ஊக்குவித்து வருகிறது. #lockdown காலத்தில் வீட்டில் இருக்கும் சின்ன இடத்திலாவது கார்டனிங் செய்ய ஆரம்பியுங்கள்.குடும்பத்துடன் சேர்ந்து செய்யுங்கள்.இது உங்கள் மனதை மட்டுமல்ல உங்கள் குடும்ப உறவையும் இயற்கையுடனான உங்கள் உறவையும் புதுப்பிக்கும்.ஒரு நாளில் குறைந்தது 10 நிமிடம் வீட்டில் அல்லது ஆபிசில் இல்லாமல் சுற்று சூழலில் நடமாடி திரியுங்கள் (#lockdown நாட்களில் அல்ல😉.) அது பார்க்,பீச் என்று எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.காலை சூரியனை உள்வாங்குங்கள். காலை சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் D உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமல்ல உங்கள் மூளைக்கு நல்ல பூஸ்டாகவும் இருக்கும். இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கு நண்பர்களே!

Practice gratitude!

நன்றி உணர்வை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி உணர்வோடு இருப்பதை கண்காணிப்பது என்பது வாழ்க்கையின் பொசிடிவ் சக்தியை அதிகரிக்க உதவும் எளிய மற்றும் பயனுள்ள வழியாகும். உங்கள் டயரியில் உங்களது வாழ்வில் கிடைத்துள்ள நன்மைகளுக்காக நன்றியுணர்வு பட்டியல் ஒன்றை எழுத பழகுங்கள்.நல்ல வைப்ஸை நாம் ஏன் மற்றவர்களுடன் பகிர கூடாது நண்பர்களே!? உங்கள் நண்பர்,குடும்ப உறுப்பினர்கள்,சக ஊழியர் அல்லது யாரோ ஒருவராக கூட இருக்கலாம் அவர்களால் உங்களுக்கு எதாவது நன்மைகள் ஏற்ப்பட்டாலோ, ஒரு சிறு உதவியை செய்தாலும் அல்லது நல்லதை சொன்னால் கூட ஒரு நன்றி கடிதம் அல்லது குறிப்பொன்றை எழுதிக் கொடுங்கள்.அன்பை மட்டுமல்ல நன்றியை பகிர்தல் கூட பொசிடிவ் வைப்ஸ்க்கான ஒரு வழி.இது உங்கள் மனநிலையை மட்டுமல்ல மற்றவர்களது நாளையும் அழகாக்கும்.நன்றி சொல்வோம் இனி………!


இந்த குட்டி குட்டி டிப்ஸ் உங்கள் மனநிலையை நெகடிவ் வைப்ஸில் இருந்து விடுபட்டு பொசிடிவ்வாகவும் உங்கள் எண்ணங்களை பொசிடிவ்வாக வைக்கவும் நிச்சயமாக உதவும். Just try it friends!!!👍👍

One thought on “பொசிடிவ்வாக யோசிப்போம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s