உலகில் 4,909,136 மக்கள் பாதிப்பு, 320,434 உயிரிழப்புகள் 1,917,4140 பேர் சுகமடைந்துள்ளனர்.(இந்த கட்டுரை எழுதும் போது). நாடுநகரங்கள் முடக்கம்,பொருளாதார வீழ்ச்சி,பணவீக்கம்,பொது மக்களின் அன்றாட வாழ்க்கை தடைப்பட்டு போயுள்ளது,சில நாடுகளில் மக்கள் வேலைகளை இழந்துள்ளனர்.இப்படி COVID19 தாக்குதல் பட்டியல் நீளுகிறது.பல நாடுகள் மாத கணக்கில் #lockdown செய்யப்பட்டு மக்கள் வீட்டுக்குளேயே முடங்கி இருக்க,நாட்டுத் தலைவர்கள் என்ன செய்வது?எதை செய்வது? என்று தெரியாமல் திணறி நிற்க,நவீன மருத்துவதையே ஆட்டம் காண செய்து வருகிறது COVID19. எனினும் தற்போதைய நிலையில் சில நாடுகள் பல இழப்புகளின் பின்னர் மீண்டு வந்துக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. #lockdown சட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி மெல்ல மெல்ல மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வழி ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையில் 992 நோயாளர்கள்,9 உயிரிழப்புகள்,569 பேர் முற்றாக குணமடைந்துள்ளனர்(இந்த கட்டுரை எழுதும் போது). பல முன்னேற்றமடைந்த நாடுகளும் தவித்து போன நிலையிலும் சரியான திட்டமிடலுடன் செயற்பட்டு இலங்கை இந்த தொற்று நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.முற்றாக ஒழிக்கபடவில்லை என்றாலும் இலங்கையில் நிலைமை மோசமாக இல்லை என்பது உண்மை. முப்படை வீரர்கள்,பொலிஸார்,சுகாதாரத்துறையின் அனைத்து மட்ட ஊழியர்கள்,மருத்துவர்கள்,தாதியர்கள்,அரசாங்கம் என அனைவரும் சேர்ந்து மேற்கொண்டு வரும் சேவை அளப்பரியது.அரசாங்கம் விதித்துள்ள #lockdown சட்டங்களை 98% பொது மக்களும் பின்பற்றி தமது ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். #lockdown காலங்களில் ஒருவருக்கு ஒருவர் மனிதநேயத்துடன் ஒத்துழைப்பு வழங்கி உதவிகளை செய்து வருகிறார்கள்.ஆக இந்த covid19 இலங்கை மக்களிடம் இருக்கும் ஒற்றுமையையும்,இலங்கையின் உறுதியையும் மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது.கடந்த 11ஆம் திகதி முதல் #lockdown சட்டங்கள் தளர்த்தப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறார்கள். நாடு முழுவது மொத்தமாக இயங்கவில்லை என்றாலும் கூட கட்டம் கட்டமாக இயங்க ஆரம்பித்துள்ளது.

எவ்வாறாயினும் WHO வழங்கிய சுகாதார விதிமுறைகளுடன் சேர்த்து அரசாங்கமும் சில விதிமுறைகளை விதித்துள்ளது.அவற்றை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 20 செக்கன் கைகளை கழுவுதல் , வெளியில் செல்லும் போது முக கவசம் அணிதல், 1m இடைவெளி பேணுதல் என்பவற்றுடன் பொது போக்குவரத்தின் போது பின்பற்ற வேண்டிய சில விதிகளையும் அறிமுகபடுத்தி உள்ளது.அதாவது பஸ்,ட்ரெயின் பயணங்களின் போது zig zag வடிவில் அமர்ந்து செல்ல வேண்டும்.ஒருவருக்கு அருகில் ஒருவர் உட்கார்ந்து செல்ல முடியாது,limited passengers மட்டுமே செல்லலாம்.

வழமையாக பஸ்களில் ட்ரெயின்களில் செல்லும் போது அடித்து பிடித்து கொண்டு சீட் பிடிப்பது தள்ளி விழுத்தி ஏறுவது என்று பல அசௌகரியங்கள் இருந்தன.அளவுக்கு அதிகமான பயணிகள் ஒரே நேரத்தில் பஸ்சில் அல்லது ட்ரெயினில் பயணம் செய்வதால் நெரிசல், சில நேரங்களில் படிகளில் தொங்கி சென்று விழுந்து மரணங்கள் கூட சம்பவித்து உள்ளது. முக்கியமாக பெண்களுக்கு சொல்ல கூடிய சொல்ல முடியாத அசௌகரியங்கள் பல இருந்தன.பெண்களை முகம் சுளிக்க வைக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தன.இதனால் பஸ்,ட்ரெயின் பயணங்களை தவிர்க்க வேண்டிய நிலை இருந்தது. இந்த விடயங்கள் இலங்கையில் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளில் பொது போக்குவரத்தில் நடைபெறுகிறது. ஆனால் இப்போது அமுல் படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறைகளால் இலங்கையில் பெண்கள் மிக சௌகரியமாக பயணங்களை மேற்கொள்ள முடிகிறது! மேலும் பொது போக்குவரத்து கண்காணிப்பில் ராணுவ வீரர்கள்,பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இது பெண்களுக்கு மேலும் பாதுகாப்பை அளிக்கிறது.இந்த மாதிரியான நடவடிக்கைகள் எதிர்காலங்களிலும் இருக்குமானால் சிறப்பாக இருக்கும். ஆக covid 19 இனால் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் விதிமுறைகளும் பெண்களுக்கு சாதகமாக மாறியுள்ளது!!!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s