ந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஆண்-பெண் சமத்துவ இடைவெளி  பல நாடுகளில் நத்தை வேகத்தில்தான் குறைந்து வருகிறது என்றால் மிகையாகாது.ஆனால் குறிப்பிட சில நாடுகளில் சொல்ல கூடிய மகிழ கூடிய மாற்றங்களும் நடக்கிறது. உலக நாடுகளில் பாலின சமத்துவத்திற்கான ப்ரோஸசை கொண்டு செய்யப்படும் சர்வே இன்னும் 108 வருடங்களின் பின்னர்தான் இந்த gender gap எனப்படும் பாலின இடைவெளி சமமாகும் என்று சொல்கிறது.ஆக  இன்னும் மூன்று தலைமுறைகளுக்கு பிறகு வரும் பெண் அப்போதுள்ள ஆணுக்கு சரி சமமாக கருதப்படுவாள். Gender gap என்பது  பொருளாதார பங்கேற்பு, கல்வி பெறுதல்,சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் என்பவற்றை கொண்டுதான் கணிக்கப்படும். 4 விடயங்களிலும் பெண்களின் பங்களிப்பு,பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கம் என்பவற்றை கொண்டு செய்யப்படும் சர்வே மூலம் பெண்கள் வாழ சிறந்த நாடுகள் எவை? பெண்கள் தனியாக ட்ராவல் செய்ய கூடிய நாடுகள், பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகள் எவை? அது மட்டுமல்ல பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் அல்லது வாழ முடியாத சூழ்நிலை கொண்ட நாடுகளின் லிஸ்ட் கூட வெளியாகிறது.

உண்மையை சொன்னால் நாங்கள் வல்லரசுகள் என்று மார்த் தட்டிக் கொள்ளும் நாடுகள் இந்த சிறந்த நாடுகள் லிஸ்டில் Top 10 இல் வருவதில்லை, மாறாக Ireland, New Zealand, Sweden போன்ற நாடுகள் தான் எப்போதும்  Top 10 இல் வரும்.ஆச்சரியம் ஆனால் உண்மை.நோர்டிக் நாடுகள் பெண்களுக்கான சிறந்த நாடுகள் என சர்வே சொல்கிறது.

2020இல் பெண்களுக்கான சிறந்த நாடுகளின் லிஸ்ட் 2020இல் உலகின் சிறந்த நாடுகளின் லிஸ்டை அடிப்படையாக கொண்டு 9800 பெண்களின் பதில்களை கொண்டும் வெளியாகியுள்ளது.மேலும் சம பலம் பொருந்திய 5 நாடுகளின் மனித உரிமைகள், பாலின சமத்துவம், வருமான சமத்துவம், முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு பற்றிய அக்கறை ஆகிய பண்புகளின் தொகுப்பிலிருந்து தரவரிசை ஆக்கப்பட்டுள்ளது.
Top #10

  • #1-Denmark
  • #2-Sweden
  • #3-Netherlands
  • #4-Norway
  • #5-Canada
  • #6-Finland
  • #7-Switzerland
  • #8-New Zealand
  • #9-Australia
  • #10-Austria

Top 10 இல் எந்த ஒரு ஆசிய நாடுகளும் இல்லை என்பதோடு Top  50 நாடுகளுக்குள் தெற்காசிய நாடுகளில் ஒன்று கூட இல்லை என்பதை பார்க்கும் போது மன வருத்தம் உண்டாகிறது. ஆசிய நாடான ஜப்பான் 18ஆவது இடத்திலும் சிங்கப்பூர், சீனா, தென்கொரியா என்பன முறையே 20,22,25 ஆவது இடங்களில்தான் உள்ளன. 73 நாடுகளை கொண்ட பெண்களுக்கான சிறந்த நாடுகளின் லிஸ்டில் தெற்காசிய நாடுகளான Sri Lanka, India, Pakistan, Afghanistan, Bangladesh, Nepal, Bhutan,மற்றும்  Maldives என்பவற்றில் Sri Lanka, India மட்டுமே  முறையே 54,58 ஆவது இடங்களில் உள்ளன.ஆக நம்ம ஆசிய நாடுகளும் நாம் இருக்கும் தெற்காசிய நாடுகளும் பெண்கள் வாழ்வதற்கு அவ்வளவு சிறந்த நாடுகள் இல்லை என்பதை சர்வே சொல்லாமல் சொல்கிறது…….😢😢


ref-usnews

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s