ட்டுமொத்த உலகமும் ஒத்த வைரஸுக்கு அடங்கி #lockdown செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் நாடுநகரம் எல்லாம் முடங்கி போன நிலையிலும் நீயா? நானா? எனப் போட்டிப் போட்டுக் கொண்டும் வாதம் செய்துக் கொண்டும் இருக்கும் நம்ம அரசியல்வாதிகளின் மத்தியில் மக்களுக்காக உண்மையாக செயற்படும் மக்களின் தலைவர்களும் அரச அதிகாரிகளும் யார் யாரு என்பதை நாம் அறிந்துக் கொண்டு வருகிறோம். மேலும் மக்கள் தற்போதுள்ள நிலையில் தமது தலைவர்களிடம் இருந்து இரக்கம்,வலிமையான சுகாதார திட்டங்கள் மற்றும் ஆதரவளிக்கும் தன்மை என்பதையே அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள். உலக தலைவர்களில் 70% அதிகமானோர் ஆண்கள்தான். ஆனால் இன்றைய சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டு வருவது பெண் தலைமைத்துவங்கள்தான். சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டவர்கள் என சொல்லிக் கொள்ளும் பல தலைவர்கள் வைரஸ் பரவலால் பதறி நிற்க சில பெண் தலைவிகளை கொண்ட நாடுகள் சிறப்பாக சூழ்நிலையை கையாண்டு வருகிறது. சிறந்த திட்டங்களை கொண்டு செயற்பட்டு வருகிறார்கள்.இதை காணும் போது  ஒருவேளை பாரதி கண்ட புதுமை பெண்களோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது.உலகின் எல்லா பெண் தலைவர்களும் நோயை திறம்பட கையாள்கிறார்கள் என சொல்ல முடியாவிட்டாலும் கூட ட்ரெண்டிங்கிலுள்ள பெண் தலைமைகளை நம்மால் புறக்கணிக்க நிச்சியமாக முடியாது! ஜெர்மனியின் ஏன்ஜெலா மெர்கல்,நியூஸிலாந்தின் ஜெசிண்டா ஆர்டென்,தாய்வான் நோர்வே, இலங்கை,டென்மார்க் போன்ற நாடுகளின் பெண் தலைமைகள் சொல்லத்தக்க மாற்றங்களை செய்கிறார்கள்.
 பெண்கள் உள்ளார்ந்த முறையில் சிறந்த தலைவர்களா இல்லையா என்ற விவாதத்தில் ஈடுப்பட்டு சிக்கலை உருவாக்குவதை  விட,  இந்த பெண் தலைவர்கள் காண்பிக்கும் சிறந்த குணங்களைப் பார்ப்பது மற்றும் நெருக்கடிகளை சமாளிக்க அவசியமானவை என்று கருதும் விடயங்கள் என்ன என்பதை கவனிப்பது  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முக்கியமான 6 பண்புகளை சுட்டிக்காட்ட வேண்டும்.

  • ஆழ்ந்து ஆராய்ந்தல்-இந்த நெருக்கடியின் போது பெண் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளை நன்கு  கவனித்து வந்தால்  அவர்கள் அனைவரும் ஆழ்ந்த  சிந்தனையுடனும்,சிறந்த உள்நோக்கத்துடனும் எவ்வாறு வழி நடத்த  வேண்டுமென்று சிந்தித்து நடப்பது  தெரியும். நோர்வேயின் பிரதம மந்திரி எர்னா சோல்பெர்க் குழந்தைகளுக்காக மட்டுமே சிறப்பு செய்தி மாநாடுகளை நடத்தி வருவது ஆழ்ந்த சிந்தனைமிக்க செயற்பாட்டின்  அடையாளமாகும்.  இங்கே பட்டியலிடப்பட்டுள்ள மற்ற அனைத்து தலைமைத்துவ குணங்களுக்கும் இது அடித்தளம் என்றும் கூறலாம்.
  • அடக்கம்/பணிவு-ஜெர்மனியின் ஏஞ்சலா மேர்க்கெல் ஒரு விஞ்ஞானியாக இருக்கலாம், ஆனால் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அறிவியல் பின்னணியில் இருந்து வந்தவர்கள் அல்ல.  நெருக்கடிகளின் போது பயனுள்ள   உத்திகளைக் கொண்டுவருவதற்கு, தலைவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளைப் பற்றி அதிகம் அறிந்தவர்களை  தங்களைச் சுற்றி வைத்து கொள்ளவும் , அவர்களின் ஆலோசனைகளை  கேட்கவும் தயாராக இருக்க வேண்டும். இதற்கு பணிவு தேவை, இப்போது கொண்டாடப்படும் பல பெண் அரசியல் தலைவர்கள் காட்டும் பொதுவான பண்பு இதுதான்.
  • அனைத்தையும் ஒன்றாக சேர்த்தல்-நியூசிலாந்தின் பிரதம மந்திரி ஜெசிண்டா  ஆர்டென் ஒரு உள்ளடக்கிய தலைமைத்துவ பாணியைப் பயன்படுத்தும் ஒரு தலைவர். தலைவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்ளவும், மற்றவர்களின் கருத்துக்களை கேட்கவும் தயாராக இருக்க வேண்டும். மன அழுத்தத்தில் மக்கள் பெரும்பாலும் , பக்கச்சார்பான முறைகளில்தான் முடிவுகளை  நாடுகிறார்கள். ஆனால் சிக்கலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கருத்தில் கொள்வது அவசியம், இதன் மூலம் ஒரு பகுதியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத்திலும் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்க முடியும். 
  • தீர்க்கமான தன்மை-கேட்கத் தயாராக இருப்பது, மாறுபட்ட குரல்களைக் கேட்பது அனைத்தும் முக்கியமானவை. தலைவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமானது. ஆண்களை பெண்களை விட தீர்க்கமானவர்கள் என்ற பரவலான கருத்து உள்ளது. இதற்கு முரணாக தாய்வானின் ஜனாதிபதி சாய் இங்-வென் வைரஸைக் கட்டுப்படுத்த ஆரம்பத்திலே தீர்க்கமாக நடவடிக்கை எடுத்தார்.
  • தகவல் தொடர்பாடல்-இயற்கையாகவே பெண்கள் சிறந்த தொடர்பாடல் திறன் கொண்டவர்கள்.மேற்கூறிய தலைவர்கள் ஆரம்ப, தீர்க்கமான நடவடிக்கை எடுத்தாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள் என்பதை மக்களுடன் தெளிவாகவும் திறமையாகவும் தொடர்புகொள்வதற்கும் அக்கறை எடுத்துக் கொண்டனர். கொரோனா வைரஸ் பரவல் எவ்வாறு செயற்படுகிறது என்பதற்கான அதிபர் ஏன்ஜெலா மேர்க்கலின் விஞ்ஞான மற்றும் சுருக்கமான விளக்கம் ஜேர்மனியர்களுக்கு முடிந்தவரை விரைவாக வைரஸை கட்டுப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள உதவியது.பிரதமர் ஜெசிண்டா நல்ல தகவல்தொடர்புக்கான அனைத்து பண்புகளையும் கொண்டவர். தனது மக்களுக்கு தெளிவாகவும், சீராகவும், கருணையுடனும் உரையாற்றுவதன் மூலம் அதை வெளிப்படுத்தியுள்ளார்.
  • பச்சாதாபம்-COVID-19 க்கு முன்பே, தனது நாட்டில் பயங்கரவாதத்தின் ஒரு கொடூரமான செயலின் பின்னர் , பிரதமர் ஜெசிண்டா, நெருக்கடியின் போது எந்தவொரு தலைவருக்கும் இருக்கக்கூடிய மிக முக்கியமான பண்புகளில் ஒன்றான பச்சாத்தாபத்தை வெளிப்படுத்தினார் . நாடு தலைவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு இது. தன் மக்கள் மீதான அன்பு,நெருக்கடிகளின் போது பச்சாதாபம்.

தெளிவாகச் சொல்வதானால், COVID-19 தொற்றுநோய்களின் போது பெண் தலைவர்கள் உலகளவில் சிறப்பாக செயற்பட்டிருக்கிறார்கள் , ஆண் தலைவர்கள் மோசமாகச் செயற்ப்படுகிறார்கள் என்று சொல்லவில்லை. இத்தாலியின் பிரதமர் கியூசெப் கோன்டேவின் தைரியமான நெருக்கடி மேலாண்மை அவரது lockdown சட்டங்கள் மிகைப்படுத்தப்பட்ட செயல் என்பன குறிப்பிடப்பட வேண்டியவை. ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவரது தேசத்தை காப்பற்ற உதவியது. ஆனால் இந்த நெருக்கடி நிலைமைகளில் பெண்கள் தமது நிர்வாக திறனையும் சிறந்த திட்டமிடல் திறனையும் வெளிக்காட்டியுள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.பெண்கள் சிறந்த தலைவர்களே என்று நிரூபித்துள்ளது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s