இந்த உலகத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் விரும்பி சாப்பிடுவது சாக்லேட் தான். வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் எளிதில் மனசு வராது.இவ்வளவு ஏன் டையபெடிக் நோயாளியாக இருந்தாலும் கூட வீட்டுக்கு தெரியாமல் சாப்பிட ஆசைப்படுவார்கள்.அதிலும் பெண்கள்…… எவ்வளவு பெறுமதியான பரிசுகளை கொடுத்தாலும் அவ்வளவாக திருப்தி கொள்வதில்லை ஆனால், சாக்லேட் பரிசாக கொடுத்தால் போதும் குழந்தையாக மாறிப் போவார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவிருக்காது. அந்த சீக்ரெட் என்ன தெரியுமா?
நம் சாக்லேட் சாப்பிடும் போது அது நம் உடலில் செரட்டோனின்,டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்களை உருவாக்கும். இந்த ஹார்மோன்கள் மனநிலையை சீராக வைத்துக் கொண்டு கவனக்குறைவு,குழப்பங்கள் மற்றும் மோசமான மனநிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது. அப்படி சாக்லேட் உடலுக்கு அவ்வளவு நன்மை செய்கிறது என்றால் அது ஏன் பெண்களுக்கு மட்டும் அதிகம் பிடிக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். காரணம் மகிழ்ச்சியாக இருக்க யாருக்குதான் பிடிக்காது…..
பொதுவாக பெண்களின் மாதவிடாய் சுழற்சி நேரங்களில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்.இது பெண்களுக்கு வேறுபட்ட மனமாற்றங்களை கொடுத்து அதிக கோப, தாபங்களை ஏற்படுத்தும்.இந்த மனநிலை மாற்றத்தை சாக்லேட் சரி செய்கிறது. மேலும் உடலில் காதல் உணர்வை ஏற்படுத்தும் phenylethylamine என்ற இரசாயன கலவை சாக்லேட்டில் இருப்பதால் அதனை சாப்பிடும் பெண்கள் சாக்லேட் போல உருகி போகிறார்கள். அதனாலதான் என்னவோ அதிகமான லவ் ப்ரோபோசஸ் சாக்லேட் உடன் நடக்கிறது போல!!!!😉 அதுமட்டுமல்ல சாக்லேட்க்காக பெண்கள் எப்படி உருகி போகிறார்கள் என்பதை “கிஸ் மீ….க்ளோஸ் யுவர் ஐஸ்” என்ற சாக்லேட் விளம்பரத்தில் பார்த்தால் தெரியும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………! 😋
