இனியும் வேண்டாம்!

உங்கள் சட்டை காலரின் அழுக்கு சலவை சோப்பு அல்லது சலவை பவுடர் எது போட்டு தேய்த்தாலும் போகவில்லையா? கவலையை விடுங்கள்! உங்கள் வீட்டு சமையலறையில் அதுக்கான சரியான தீர்வு இருக்கிறது. என்ன என்று அதிகம் யோசிக்காதீங்க! வெள்ளை சீனிதான் அந்த தீர்வு!! துணிகளின் அழுக்கை அகற்றுவதற்காகவே சந்தையில் கிடைக்கும் சோப்புகளால் நீங்காத அழுக்கு சீனியால் போகிறது என்றால் எவ்வளவு வீரியமுள்ள இரசாயனப் பொருளைத்தானே நாம் ஆசை ஆசையாக அள்ளி சாப்பிடுகிறோம்…..

சற்று யோசித்துப் பாருங்கள் சட்டை அழுக்கே சாதாரணமாக போகிறது என்றால் நம் குடல் என பாடுபடுகிறது என்று? வயல்களில் பசுமையாகவும் சத்துமிக்கதாகவும் விளையும் இயற்கை கரும்பு வேலை சீனியாக மாற்ற என்ன என்ன கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்துக் கொள்ளுங்கள்……

  1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில்,பிளீச்சிங் பவுடர் அல்லது குளோரின் பாக்டீரியா கன்ட்ரோலாக பயன்படுத்தப்படுகிறது.
  2. பிழிந்த சாற்றில் லீட்டருக்கு 200மில்லி விகிதம் பொஸ்போரிக் ஆசிட் கலந்து,70 சென்டிகிரேட் சூடுப்படுத்தப்படுகிறது. இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
  3. அதன் பின்,சுண்ணாம்பை 0.2% அளவில் சேர்த்து, sulfur dioxide வாயும் செலுத்தப்படுகிறது.
  4. கொதிகலனில் 102 சென்டிகிரேட் சூடுபடுத்தும் போது வைட்டமின்களை இழந்து,செயற்கை சுண்ணாம்பு சாது அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுகிறது.
  5. அடுத்து பொலி எலக்ட்ரோலைட் எனப்படும் செமிசிலை சேர்த்து தெளிகலனில் மண்,சக்கை உள்ளிட்ட பொருட்கள் பிரிக்கப்பட்டு தெளிந்த சாறு பெறப்படுகிறது.
  6. சுடுகலனில் கொஸ்டிக் சோடா,வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தியான ஜூஸ் தயாரிக்கப்படுகிறது.
  7. மீண்டும் sulfur dioxide, sodium hydro sulfide சேர்க்க படிக நிலைக்கு சீனியாக வருகிறது.அத்துடன் sulfur dioxide என்ற இரசாயனம் சீனியில் கலந்து விடுகிறது

சீனி பளிச்சென்று வெண்மையாக இருக்க காரணம் மிருக எழும்பு சாம்பல்தான்! (மாடு அல்லது பன்றி) ஆனால் தற்போது இதற்கு மாற்றாக அயன் எக்சேஞ்ச் ரெசின் என்பதை சில இடங்களில் பயன்படுத்துகிறார்கள்.
தயாரித்து ஆறு மாதத்துக்கும் அதிகமான சீனியை சாப்பிடவே கூடாது. அப்படி சாப்பிட்டால் குடலில் நஞ்சாக சேர்வது மட்டுமல்ல, குடல்புண், சளித்தொல்லை, இரத்த அழுத்தம், உடற்பருமன், இதயநோய் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளிட்ட பெரிய வியாதிகள் முதல் பல் வலி,பல் சொத்தை வரை அனைத்திற்கும் இது காரணமாக இருக்கும்.
இத்தனை கெமிக்கலை ஆசையாக அள்ளி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வெல்லம், பனங்கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை என்பவரை சாப்பிடுங்கள். இரத்த அழுத்தம், இதய நோய்,சர்க்கரை வியாதி என்பன உங்கள் அருகில் நெருங்கவே நெருங்காது!!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s