உலகில் இருக்க எல்லா விடயங்களுக்கும் விலை நிர்ணயித்து பேரம் பேசி பேசி மனிதனுக்கு இப்போ மனித உயிரோட மதிப்பும் தெரியாமல் போச்சு. ஒரு சிங்கம் பசித்தால் கூட இன்னொரு சிங்கத்தை அடித்து தின்பது இல்லை. ஆனால் மனித பிறவிகளாகிய நம்ம, பசிக்காக மிருகத்தை அடித்து சாப்பிடுறோம். வெறிக்காக மிருகத்தை விட மோசமாக கூட இருக்க மனிதனையே அடித்து கொல்றோம். மத வெறி,இன வெறி,பண வெறி,காம வெறி,குடி வெறி என்று ஒரு மனித உயிர் அநியாயமாக போக சிலரது வெறிதான் காரணமாக இருந்து வருகிறது. முக்கியமாக சில காம வெறியர்களின் ஆசைக்கு பலியான பெண்கள்,சிறுமிகள் எத்தனை பேர் உலகில்? வல்லரசு நாடு வரிய நாடு என்ற வித்தியாசம் இந்த விடயத்தில்  இல்லை. 5 வயது குழந்தை முதல் கயவர்களின் ஆசை தீயில் கருகி கசக்கி எறியப்பட்ட அவலங்கள் எவ்வளவு  நடந்து இருக்கிறது. ஆனால் ஜெயஸ்ரீயின் கதையே வேறு. எந்த பாவமும் செய்யாத அந்த சின்ன உயிர் வெறும் முன்விரோத தீயில் கருகி போன துயரம் மே மாதம் 10 ஆம் திகதி நடந்தது….

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை விவசாயி கூலி ஜெயபால், வீட்டில் ஒரு பெட்டி கடையும் வைத்துள்ளார்.இவருக்கும் இவரது சகோதரருக்கும் சொந்தமான 1 ஏக்கர் நிலம் தொடர்பில் முருகன் என்ற அரசியல்வாதியுடன் முறுகல் இருந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி பெட்டிக்கடையில் நடந்த தகராறில் ஜெயபாலின் மகனின் காது சாவு கிழிந்துள்ளது. இது பற்றி முறைப்பாடு செய்ய அடுத்தநாள்(மே 10ஆம் திகதி) போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜெயபால் செல்ல அவரின் மனைவி ராஜி புல் அறுக்க வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஜெயபாலின் மகளான 10 வகுப்பில் படிக்கும் ஜெயஸ்ரீ மட்டும் தனியே வீட்டில் இருந்துள்ளார். காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அயலவர்கள் பதறி கொண்டு வீட்டுக்குள்ளே செல்ல அங்கு ஜெயஸ்ரீ நெருப்பில் எரிந்து கொண்டு இருந்திருக்கிறாள். துடித்துக் கொண்டிருந்த ஜெயஸ்ரீயை ஆம்புலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைகள் நடத்தப்பட்டது. ஆனால் அப்போதே ஜெயஸ்ரீக்கு 95% தீக்காயங்கள் இருந்துள்ளது. அங்கு வந்த பொலிஸார் ஜெயஸ்ரீயிடம் விசாரணைகளை செய்தனர். அப்போது ஜெயஸ்ரீயின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. பார்ப்போரையும் கேட்போரையும் நிலைகுலைய செய்து விடும் அவளது வார்த்தைகள்.

அந்த கவுன்சிலரும் கலியபெருமாளும் என் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க,என் அப்பா எங்க?

இது ஜெயஸ்ரீ கடைசியாக சொன்ன வாக்குமூலம்….

பேசுவதற்கு கூட முடியாமல் நாக்கு வறண்டு “தண்ணீ தாங்க… தண்ணி தாங்க…தண்ணீ தந்தாதான் பேசவே முடியும். தண்ணீ தாங்களேன்!…. என்று அந்த பிஞ்சு கெஞ்சுகிறது.பார்ப்பவரின் கண்களில் கண்ணீர் அருவி கொட்ட வைக்கும் அந்த வார்த்தைகள்.நெருப்பில் எறிந்தவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது இல்லை. ஆனால் அந்த பிஞ்சு தண்ணீர்க்காக ஏங்கி நாக்கு வறண்டு போச்சு தண்ணீ தாங்க என்று கெஞ்சும் போது மனம் துடிக்கிறது. முருகன் மற்றும் கலியபெருமாள் ஜெயபாலின் வீட்டிற்குள்  நுழைந்து ஜெயஸ்ரீயின் காய்,காலை கட்டிப் போட்டு வாயில் துணியை வைத்து அடைத்து கெட்ட வார்த்தைகளில் திட்டி அடித்து உதைத்து கஷ்டப்படுத்தி உள்ளனர். அதன் பின் அங்கு இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து  விட்டு வீட்டையும் வெளிப்பக்கமாக புட்டி சென்றுள்ளனர் அந்த பாதகர்கள். ஜெயஸ்ரீ வாக்குமூலம் வழங்கிய வீடியோ சோஷியல் மீடியாவிலும் பரவி பார்ப்பவரை பதற வைத்துள்ளது. அந்த வீடியோவில் ஜெயஸ்ரீயால் கண்ணை கூட திறக்க முடியவில்லை. முகம் எல்லாம் வெந்து கருகி இருந்தது. வாக்குமூலம் வழங்கவே முடியாமல் கஷ்டப்படுவது தெரிந்தது. 15 வயது சிறுமி. அவள் இந்த உலகத்தில் அனுபவிக்க வேண்டியது எவ்வளவு இருக்கும்? சாதிக்க வேண்டியவை எவ்வளவு?அவளுக்குள் எத்தனை கனவுகள் இருந்திருக்கும்? அவளது பெற்றோருக்கு எத்தனை ஆசைகள் இருந்திருக்கும்? எதற்கு?? இந்த கொலை? வெறும் முன்விரோதம்! அப்பா மீது இருந்த கோபம், சாதாரண சண்டை. அதுவும் அவள் அப்பாவுக்கும் முருகனுக்கும் தானே. இதில் ஜெயஸ்ரீ எதுக்காக சாகனும்? நெருப்பில் வெந்து கருகும் போது அந்த சின்ன இதயத்தில் எத்தனை வலி,வேதனை இருந்திருக்கும்? அந்த சின்ன உடல் எவ்வளவு வலியை அனுபவித்து இருக்கும்? தன்னை காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு சிரமபட்டிருக்கும்? அந்த நிமிடம் அவள் மனதுக்குள் என்ன தோன்றி இருக்கும்? பெற்றோல் ஊற்றி எரிக்கும் அளவுக்கு என்ன கோவம் அந்த சின்ன உயிர் மீது…… ஒரு நிமிடம் அவள் இடத்திலோ இல்லை அவள் பெற்றோர் இடத்திலோ இருந்து யோசித்து இருந்தால் இப்படி செய்ய நினைத்து இருப்பார்களா?ஜெயஸ்ரீ, நான் என்ன தப்பு பண்ணேன்… என்னை எதுக்கு எரிக்குறிங்க? என்னை விட்டுருக்க ப்ளீஸ் ……..இந்த 10 exam ல் நல்ல மார்க் எடுக்கணும்….centum வாங்கணும்….என்னை விடுங்க …..நான் இன்னும் ரொம்ப நாள் வாழ ஆசை படுறேன்…..நிறைய சாதிக்கணும் …….நான் வாழனும்………உங்க கையால கருகி சாகவா எங்க அம்மா அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தாங்க? என்னை எரிக்க எப்படி தோணுது உங்களுக்கு…” இப்படியெல்லாம் இன்னும் எப்படியெல்லாமோ கதறி இருக்க மாட்டாளா? ஆனால் அதை வெளியில் சொல்ல கூட முடியாமல் அவள் வாயையும் அடைத்து வைத்து விட்டார்களே?! அந்த பிஞ்சு உடம்பு நெருப்பில் வேகும் போது எப்படி துடிதுடித்து போயிருக்கும்…..? மனித உயிரின் மதிப்பு தெரியாத மனித மிருகங்களுக்கு நடுவில் இன்னும் எத்தனை ஜெயஸ்ரீகள் எரிய போகிறார்கள்? யார் தடுப்பார்கள்? யார் எதிர்ப்பார்கள்? எந்த கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றுவார்? இவ்வளவும் செய்த அந்த இரு பாதகர்களும் ஜெயஸ்ரீயின் வாக்குமூலத்திற்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே அநியாயமாக கருகி இறந்து போன ஜெயஸ்ரீக்கு அது நீதியாக அமையும். ஜெயஸ்ரீ கடைசியாக  சொன்ன வார்தைகள் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது “என் அப்பா எங்க?” …….. 

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s