நாம் வாழ்வது தொழில்நுட்ப உலகம். நுனிவிரலில் மொத்த உலகமும் அடங்கி கிடக்கிறது.தவக்கும் குழந்தை முதல் தள்ளாடும் தாத்தா வரை இன்று தொழிநுட்பவாதிகள்தான். ஆனால் இப்படியான தொழிநுட்ப நூற்றாண்டிலும் தீண்டத்தகாதவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என்பது தெரியுமா? என்னடா இது?…. தீண்டத்தகாதவர்களா?…. இது என்ன  புது கதை? இது பெண்களை போற்றும் காலம் தானே? இப்படி எல்லாம் உங்களுக்குள் சந்தேகம் வரலாம். உண்மைதான் கல்வி,தொழில் என எல்லாவற்றிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள். அந்த முன்னேற்றம்,சாதனை பற்றி நான் சொல்லவில்லை. இது பெண்களின் ஆரோக்கியம் பற்றியது. மாதவிடாய்! பிரியட்ஸ்!  மறைக்கவும்,மறுக்கவும் இங்கு ஏதும் இல்லை. ஆண்,பெண் என அனைவரும் அறிந்த விடயம்தான். இதை பற்றி தெரியாது என்று சொல்ல முடியாது. நமது கல்வி பாடப் புத்தகங்களில் கூட இது பற்றிய தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அப்படி இருக்கையில் இதை மறைக்க வேண்டிய காரணம் என்ன? அப்போ பீரியட்ஸ் வந்தால்,எல்லாருகிட்டயும் சொல்லிட்டு திரிய சொல்லுரீங்களா?….என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. அனைவரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நிச்சயமாக,மாறாக பெண்ணை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியமும் இல்லையே?!….
இன்றும் பெரும்பாலான பெண்கள் பீரியட்ஸ் நாட்களில் வீடுகளில் ஒதுக்கி வைக்கப்படுவது,சில கிராமப்புறங்களில் இன்னும் வீட்டின் கொல்லைப்புறத்தில் தங்க வைப்பது என்பன நடந்துக் கொண்டுதானே இருக்கிறது. மக்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் மூடநம்பிக்கை பல சந்தர்ப்பங்களில் பெண்கள் ஒதுக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மாதவிடாய் குறித்த சரியானதும்,போதுமானதும் விழிப்புணர்வு இல்லாத சூழ்நிலையில் பீரியட்ஸ் நாட்களில் பாடசாலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பெண் பிள்ளைகள் இன்னும் நாம் சமுதாயத்தில் இருக்கிறார்கள்.போதியளவு சுகாதார வசதிகள் இல்லாததால் அவதி படும் பெண்கள் இருக்கிறார்கள். வேலைக்காக செல்லும் பெண்கள் இந்த நாட்களில் வெளியில் சொல்ல முடியாத வேதனையை அனுபவிக்கிறார்கள். பாத்ரூமில் குப்பைக்கூடை வைப்பதோடு நின்று விடுகிறது வேலைத்தளங்களின் வேலை. இவ்வளவு ஏன் தனது வலியை கூட மற்றவர்களிடம் சொல்ல முடியாது பெண்ணால்….அப்படி சொல்வது அசிங்கமான செயலாகத்தான் கருதப்படுகிறது. இன்றைய நவீன காலத்திலும் பெண்கள் யாரிடமும் பகிர கூடாத,மற்றவருடன் பேச தயங்குகிற விடயமாகவே மாதவிடாய் இருந்து வருகிறது.உடலுறவைப் பற்றியே வாய்கூசாமல் பேசும் இந்த காலத்தில் உடலில் ஏற்படும் சாதாரண உடலியல் மாற்றத்தை பற்றி பேச கூடாது என்று கருதுவது நம் சமுதாயத்தின் பிற்போக்குவாதத்தை காட்டுகிறது.

பீரியட்ஸ் அல்லது மாதவிடாய் என்பது வெறும் உடலியல் மாற்றம் மட்டுமே. உடலில் உள்ள ஹார்மோன்களின் இரசாயன மாற்றமே இது ஆண்களிலும் நிகழ்கிறது. ஆனால் ஆண்களில் நிகழ்வதற்கும் பெண்களில் நிகழ்வதற்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளது.இந்த குருதிப்போக்கு,வலி இதெல்லாம் பெண்களுக்கு மட்டுமே! உடலுக்கு அதிக போசனையும், ஓய்வும் தேவையான நாட்கள் அவை. அதனாலேயே நம் முன்னோர்கள் பெண்களை அந்த நாட்களில் தனியாகவும் வீட்டில் ஒரு வேலை செய்ய விடாமலும் வைத்திருந்தார்கள். ஆனால் அதையே தற்போது வேறு விதமாக மாறி பீரியட்ஸ் நாட்களில் பெண்களை ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இது பசி,தூக்கம் போல இருமல்,தும்மல் போல இயற்கையானதும் தவிர்க்க முடியாததுமானது. உடலளவில் பலவீனமடைந்துள்ள போது அவர்களை ஒதுக்கி வைத்து மனதளவில் காயப்படுத்துவது சரியல்ல. தள்ளி வைக்கவும், ஒதுக்கி வைக்கவும் பீரியட்ஸ் ஒன்றும் கொடூரமான தொற்று நோய் அல்ல. மேலும் அது பெண்களின்  பிழையும் அல்ல.தவிர்க்க முடியாத உடலியல் மாற்றம் மட்டுமே! பீரியட்ஸ் பெண்களுக்கு வலி கொடுக்கும் நாட்கள்.பல பெண்கள்

நான் எதுக்குதான் பொண்ணா பொறந்தேனோ?…”

என்று………

வேதனைபட வைக்கும் நாட்கள். அந்த வலி நாட்களை மேலும் வலிமிக்கதாக மாற்றுவதை தவிர்ப்பது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்!!!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s