வணக்கம் நண்பர்களே! மிக நீண்ட நாட்களுக்கு பின் #singapenn இல் நீண்ட தமிழ் பதிவில் உங்களை சந்திக்கிறேன். இன்றைய பதிவு இதற்கு முன் பேசிய விடயம்தான். நான் மட்டும் இல்லைங்க என்னை போல பல ஊடகவியலாளர்கள் எழுதும், நம் சோஷியல் மீடியா போராளிகளின் #டேக் போராட்டங்களில் அதிகம் போஸ்ட் செய்யப்படும் எப்பவும் பரபரப்பான ஒரு டோபிக்தான்…… #பெண்கள். அட இவ்வளவு பில்டப் பெண்களுக்கா என்று குழம்பி போகாதீங்க நட்புக்களே……. யார் எவ்வளவு எழுதினாலும் யார் என்ன போஸ்ட் செய்தாலும் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் எத்தனை சங்கங்கள் வந்தாலும் பெண்களின் தலையெழுத்து மாறி போச்சா இல்லயே!!?? நீங்க நம்பலனாலும் அது தான் உண்மைங்க….😏 பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்காத நாட்களும் இல்லை,நடக்காத நாடுகளும் இல்லை. தினமும் நம்ம காதுல உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு பொண்ணுக்கு நடந்த அநியாயம் வந்து விழதான் செய்து நண்பர்களே, அதை மறுக்க முடியுமா??😑

பெண் பிள்ளைகளை பெத்தவங்க நிஜமாவே வயிதுல நெருப்பை கட்டிகிட்டு தான் வாழ்றாங்க. என்னை பொருத்தவரை பொண்ணா பொறந்து இந்த உலகத்துல சர்வைவல் ஆவது ரொம்ப கஷ்டம்தாங்க…….🤷🏻‍♀️ ஆண்டவன் ஆணுக்காக பெண்ணையும் பெண்ணுக்காக ஆணையும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் துணையாக வாழதான் படைத்து வைத்தான். ஆனால் அது அப்படியா இருக்கு??? இல்லையே……. சரியா சொல்ல போனால் “வேலியே பயிரை மேய்ந்த” கதைதான் அதிகம்😑 பெண்கள் படும் கஷ்டங்களை சொல்ல இந்த ஒரு பதிவு போதாது, இருந்தாலும் எதாவது ஒரு மாற்றம்,இந்த பதிவை வாசிப்பதனால் யாரோ ஒருவரிடம் ஏற்படக் கூடிய மாற்றம்….. அது தான் #singapenn இன் வெற்றி!😊 இதற்கு முன் என்று தீரும் எங்கள் சோகம்…… பதிவிலும் Sexual harassment…. பதிவிலும் பேசிய விடயங்கள் இல்லாமல் சற்று வித்தியாசமான விடயத்தை பற்றி பார்க்கலாம் நண்பர்களே👍 காதல்…….ல்வ்……. அட என்னங்க உங்க முகம் ஏன் இப்படி சிவக்குது!?😉 ஓஹோ வெட்கமா??? இருக்காதா பின்ன…….. அந்த வார்த்தைக்கான பவர் அப்படி😁. பள்ளி,கல்லூரி,வேலை என ஏற்படும் இடம்,நேரம், சந்தர்ப்பம் தான் வேறுபட்டிருக்கும். ஆனால் காதல் அனுபவம் நிச்சயமாக இருக்கும்😍

காதல் ஒண்ணும் கடவுள் இல்லையாடா …….

என்ற உலகநாயகனின் பாடல்

உங்களுக்கு ஞாபகம் இருக்குமல்லவா?அது தாங்க உண்மை… வெறும் ஹார்மோன்களின் மாற்றத்தினால் உருவாகும் ஒரு உணர்வு மட்டுமே… எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவடைவதில்லைங்க,சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மாறும் போது மன மாற்றமும் ஏற்படுவதுதான் இயற்கை. அது சரி.. பொண்ணுங்க சர்வைவல் ஆகுறதுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்?? அப்படினு நீங்க கேக்குறீங்க இல்லயா???…..😌 இருக்கே… சம்பந்தம் இருக்கே…👇

ஆண்கள் பெண்களை விட இலகுவில் காதல் வயப்படுவார்களாம்🤭 அப்படி இருக்க ஒரு பொண்ண பார்த்ததும் பிடிச்சு போய் அவ பின்னாடியே சுற்றி அவளை பற்றி டிடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணி அவகிட்ட போய் ப்ரோபோஸ் பண்ணும் போது அதை கண்டிப்பாஅந்த பொண்ணு ஏற்றுக் கொண்டே ஆகணும்னு எதிர்ப்பார்ப்பாங்க சில பசங்க…….ஆனால் அந்த பொண்ணு வேண்டாம் அப்படினு சொல்லிட்டா விலகிடலாமே…… அப்படி விலகி போறவங்க ரொம்பவும் குறைவு😕 லவ் ட்டொர்ச்சர் பண்ணுவாங்க…… அதுனால் கோபப்பட்டு அந்த பொண்ணு திட்டினா, சில நேரங்களில் அடிச்சுற கூட வாய்ப்பு இருக்கு…. அது அந்த பையனுக்குள்ள ஒரு கோபத்தை வன்மத்தை பழி வாங்கும் எண்ணத்தை தூண்டி விடுகிறது…. அது ஆசிட் அடிக்குறது, அசிங்கப்படுத்த முயற்சி செய்றது,கடத்தல்,கற்பழிப்பு,கொலை இப்படி ஏதோ ஒரு க்ரைம்ல போய் முடியும்….. முக்கியமான விஷயம் நான் எல்லா ஆண்களையும் சொல்ல வரல நண்பர்களே! ஒரு சிலர் மட்டுமே 🙁

அடுத்த வகையறாவுக்கு போவோம்…வெறும் உடலியல் ஏற்படும் ஆசைக்கும் காதல்னு பேர் வச்சிகிட்டு ஆசை வார்த்தை காட்டி,நம்பிக்கையை கொடுத்து, கொஞ்சம் அசந்ததும் கருவில் குழந்தையையும் கொடுத்து காணாமல் போகும் வகையறா……ஏமாந்து போய் கருவையும் அதோடு சேர்த்து அவமானத்தையும் சுமக்க நேரிடும். அந்த பொண்ணாவது கொஞ்சம் உஷாராக இருந்திருக்கலாம் அல்லவா??😣 ஒரு பழமொழி நினைவுக்கு வருது நண்பர்களே!!

முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு பட்டாலும் நஷ்டம் சேலைக்கு தான்……🥺

இது தான் அந்த பழமொழி

ஒரு வேளை அந்த பொண்ணு அவனுடய ஆசைக்கு தலை அசைக்கா விட்டால்…….😮 அவ்ளோ தாங்க, ஏதேதோ காரணம் காட்டி அவளை கழட்டி விட முயற்சிப்பான்😤. இல்லனு வைங்க லவ் பண்ணும் போது எடுத்துக் கொண்ட போட்டோக்கள் பேச ஆரம்பிக்கும்😑.

விலகினாலும் சரி நம்பி போனாலும் சரி வேதனையும் சோதனையும் பொண்ணூக்கு தான்😥(எல்லாரையும் சொல்லவில்லை) இப்படி எல்லாம் நடக்குறதுனாலயோ என்னவோ சாதுவான பெத்தவங்க கூட காதல்ங்ற வார்த்தையை கேட்டதும் சாமி ஆடுறாங்க போல 🤔.

#singapenn இன் இந்த காதல் பரிதாபங்கள் பதிவு😥😤

தொடரும்…….

One thought on “ரொம்ப கஷ்டமப்பா…..

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s