வணக்கம் நண்பர்களே🙏 காதல் சோதனைகள் பற்றி ரொம்ப கஷ்டமப்பா….. பதிவில் பார்த்தோம். இப்போ அதில் சொல்லி முடியாத விடயங்கள் பற்றி பார்க்க போறோம்.

காதலிக்குற பொண்ணை காரணம் இல்லாமல் காரணம் காட்டி கழட்டி விடுவதும், நீயும் வேணாம்; உன் காதலும் வேண்டாம் சொல்லிட்டு ஓடுற பொண்ணை துரத்தி துரத்தி காதல் தொல்லை கொடுப்பது சினிமாவில் மட்டுமல்ல நம்ம நிஜ வாழ்க்கையில் கூட நடக்க தானே செய்கிறது….😥 நான் ஒட்டு மொத்த ஆண் இனத்தையே குறை சொல்ல வரல…… ஆனால் நான் சொல்றதுல பொய்யும் இல்ல🤷🏻‍♀️

காதல் தோல்வி/லவ் ப்ரெக் அப் இந்த வார்த்தைக்கும் அதுனால் உண்டாகும் வலியும் எங்களுக்கு தான் சொந்தம்னு ப்ரெக் அப்பின் பின் பீல் பண்ணி பீல் பண்ணி உடம்பையும் கெடுத்து மனசையும் கெடுத்து அடுத்தவன் நிம்மதியையும் கெடுப்பது அனேகமாக ஆண்கள் தான். காதல் தோல்விக்கு பின் ஆண்கள் அடிக்கும் லூட்டி இருக்கே………😬 கடவுளுக்கும் பொறுக்காது.இதில் கொடுமை என்ன தெரியுமா?? இந்த மாதிரி பீல் மட்டுமே பண்ணும் ஆண்களுக்கு சப்போர்ட் ஆக இந்த சினிமா படங்களும்,பாடல்களும்,வசனங்களும்,காட்சிகளும் அமைக்கப்படுவதுதான். என் அறிவுக்கு எட்டிய மட்டிலும் எந்த திரைப்படமும் பெண்ணின் வலியை கூறியதாக தெரியவில்லை. ஒரு வேளை என் கண்ணுக்கு தெரியாம இருக்கும் போல…🤷🏻‍♀️ அதற்கு என்ன காரணமாக இருக்கும்??🤔 இதை பற்றி ஒரு பையனிடம் கேட்டேங்க…

பொண்ணுங்க ப்ரெக் அப் ஆனதுக்கு அப்பறமா ரொம்ப ஈசியா மறந்துட்டு அடுத்த காதல் அல்லது மேரெஜ்க்கு ரெடி ஆகிறுவாங்க…. அவ்ளோ பீல்லிங்ஸ் அவங்ககிட்ட இருக்காது

இப்படி தான் சொன்னார்.

ஆக பெண்களிடம் காதலில் ஏற்படும் தோல்வியால் எந்த வலியும் இல்லை என்பது பெரும்பாலான ஆண்களின் வாதம்🤨. அப்படி இல்லைங்க…. இயல்பாகவே பெண்களுக்கு அதிக வலியை தாங்கும் வலிமையும், சமாளிக்கும் தன்மையும் இருக்கும்.எந்த திரைப்படத்திலும் சொல்லப்படாத சொல்ல முடியாத சோகத்தை மனதில் வைத்து மறைத்து கொள்ளும் தன்மை பெண்ணிடம் உண்டு. காதல் தோல்வியை சொல்லும் பாடல்கள் பெரும்பாலும் ஆண் சார்பாகவே இருக்கிறது நண்பர்களே!🤐 அந்த பாடல்களில் உணரப் படாத வலி பெண்ணுக்குள் இருக்கு என்பதுதான் மறுக்கப்படும் உண்மை……

ப்ரெக் அப்பை காரணம் காட்டி எந்த பொண்ணு டாஸ்க்மார்க் போக மாட்டாள். தன்னை பிரிந்த காதலனை கழுவி கழுவி ஊற்ற மாட்டாள்(விதி விலக்குகளும் இருக்கு 😁) அதாவது ஆண்களுக்கு 30 வயதில் வரும் maturity பெண்களுக்கு 21 வயதிலே வந்துரும். ப்ரெக் அப் ஆண் பெண் இருவரையும் நிச்சயமாக பாதிக்கும் அவ்ளோ தான். காதல் மட்டும் வாழ்க்கை இல்ல, அதை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கு அப்படினு எப்போ புரிந்து நடக்கிறோமோ அப்போ தான் இந்த மாதிரி பிரச்சினைகள் குறையும். ஆணும் பெண்ணும் ஒருவரது உணர்வை இன்னொருவர் புரிந்து நடந்துக் கொண்டாலே பாதி குழப்பங்கள் தீர்ந்து போகுமே….

நிஜமான சுதந்திரம், கால மாற்றம், சமத்துவம்,பரிணாம வளர்ச்சி, அபிவிருத்தி, தொழிநுட்ப முன்னேற்றம் இதெல்லாம் எப்போது என்றால் மகாத்மா காந்தி கூறியது போல ஒரு பெண் இரவில் யார் துனையும் இல்லாமல் முழுமையாக தன் இடம் வந்து சேரும் நாள் எதோ?… ஒரு பெற்றோர் மாலை 6 மணிக்கு பின்பும் தம் மகள் வீடு வந்து சேரும் நேரம் வரை எந்த பயமும் இல்லாமல் நிம்மதியாக இருக்கும் நாள் எதோ? செய்தி தாள்,ரேடியோ, டிவி, சோசியல் மீடியாக்கள் என்று எதிலுமே ஒரு துயர செய்தி பரவாமல் இருக்கும் நாட்கள் எவையோ? உலகின் ஒவ்வொரு மூலையிலும் வாழும் பெண் இனம் முழு பாதுக்காப்போடும் நிம்மதியோடும் வாழ முடிகின்ற நாள் என்றோ? அந்த நாள்…… நாம் கொண்டாடுவோம் மகளிர் தினமாக…சுதந்திர தினமாக…. தீபாவளியாக… அன்று சொல்லுவோம்….

காலம் மாறி போச்சு;நம் கண்ணீர் மாறி போச்சு……

என்று அன்று பாடுவோம் .

அது வரை ரொம்ப கஷ்டமப்பா…….!😏.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s