இன்றைய நாட்களில் நம்மை சுற்றி எது நடந்தாலும் அதற்கு நம் ரியாக்க்ஷன் வைகைபுயல் வடிவேலுவின் எதாவது ஒரு டெம்ப்ளட்டாக தான் இருக்கும்😃 அதுவும் சோஷியல் மீடியாக்களில் எல்லாமே மீம் டெம்ப்ளட்க்கள் தான் அதிகளவில் பதிலாக வரும். மீம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிப் போச்சு…அந்த மீம்மில் நமக்கு பிடிக்காத வார்த்தை இருந்தால் கூட சிரிச்சுட்டு போய்ருவோம்…ஆனால் நமக்கு நெருக்கமான அல்லது தெரிந்த யாரவது விளையாட்டாகவோ கோபத்திலோ அதே வார்த்தையை சொல்லிட்டால் நம்ம பண்ற அலப்பறைக்கு அளவே இருக்காது😶 இதையும் மீம் போல சிரிச்சுட்டு கடந்து போக ஏன் நமக்கு முடியல🤔. என்னுடைய வாழ்க்கையில் நடந்த இரண்டு சுவாரஸ்யமான சம்பவங்கள் நெகட்டிவ்வையும் பொசிட்டிவ்வாக யோசிக்கப் பழக்கியது😊
எனக்குள் அடிக்கடி வாழ்வின் மீது வெறுப்பு ஏற்படுவதுண்டு எல்லோருக்கும் போல….என் நெருங்கிய நண்பரிடம் இதை பற்றி பேசும் போது அவர் சற்று கடுமையாக,”உனக்கு என்ன குறை?அழகான குடும்பம்,நட்பு,தரமான கல்வி,வேலை,நேரத்துக்கு சாப்பாடு என எல்லாம் இருந்தும் வெறுப்பு சோகம் சாவுன்னு உளரிட்டு இருக்கியே பரவால்ல சாகுறத்துதான் சாகுற..இரண்டு நாளுக்கு அப்புறமா சாவு”..ன்னு சொல்ல குழம்பி போய் நான் “ஏன்” ன்னு கேட்டேன்..”என் கைல இப்போ காசு இல்ல😞 நீ செத்தா பூமாலை,கட் அவுட் ன்னு செலவு பண்ணனும்ல…இரண்டு நாள்ல காசு வந்துரும்….அப்புறம் நீ செத்து போ”ன்னு நண்பர் சொன்னதும் “அடப்பாவி😮 நல்ல நட்பு😅” ன்னு சிரிச்சுட்டேன்…
இதுவும் நல்ல ஐடியாவ இருக்கும் நண்பர்களே! இந்த சம்பவத்திற்கு பிறகு எனக்குள் வெறுமை தோன்றினால் இந்த கலந்துரையாடல் தான் நினைவிற்கு வரும்…கூடவே சிரிப்பும்😂
அடுத்த சம்பவம் எனது நட்பு வட்டத்தில் இன்னொரு நெருங்கிய நண்பர் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் I Love You என்பதற்கு பதிலாக I Hate You என்பதையே எப்போதும் சொல்வார். இது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கவே அவரிடமே கேட்டு விட்டேன்.அவரது பதில் எனக்கு புதிதாக இருந்தது. “நான் யாரை அதிகம் நேசிக்கிறேனோ அவங்கள தான் என்னால வெறுக்கவும் முடியும். என்னை பொருத்தவரைக்கும் வெறுப்பும் அன்பின் வெளிப்பாடு தான் .அதுனாலதான் எனக்கு ரொம்ப பிடிச்சவங்ககிட்ட இப்படி சொல்றேன்,பதிலுக்கு அவர்களும் அப்படியே சொல்லுவாங்க ..அப்போ எனக்குள்ள ஒரு சிலிர்ப்பு வரும்..அது போதும் எனக்கு” ன்னு சொல்லி முடித்தார்.
கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் நல்ல இருக்கே ன்னு எனக்கும் தோன்றியது நண்பர்களே!
அதிகம் நேசிக்கும் ஒருவரை தான் அதிகம் வெறுக்க முடியும், அதிகம் ரசிக்கும் ஒருவரை தான் அதிகம் விமர்சிக்க முடியும் ,ஆகவே நம் மீது யாரவது நெகட்டிவ் விமர்சனங்களை அல்லது வெறுப்பை காட்டினால் அதில் இப்படி ஒரு பொசிட்டிவ்வான வைப் இருப்பதை நான் உணர்ந்துக் கொண்டேன். அது மட்டும் இல்லாமல் நெகட்டிவ்வாக பேசுபவர்களிடம் நாமும் நெகட்டிவ்வாக பேசும் போது அங்கே பொசிட்டிவ் உருவாகிறதை உணர்ந்தேன்.இது சிம்பிள் மதமெட்டிக்ஸ் தான் நண்பர்களே (- X – = +)
பொதுவாகவே நம்ம நண்பர்களோட பேசும் போது நம்மள அறியாமலே இந்த டெக்னிக் பயன்படுத்திட்டுதான் இருக்கோம்.உதாரணமாக நம்ம சோசியல் மீடியா குரூப்பில் யாராவது மன விரக்தியோட வாழவே பிடிக்கல சாக போறேன் பாய் ப்ரெண்ட்ஸ் ன்னு மெசேஜ் போட்டதும் குரூப்பில் இருக்க போராளி நண்பர்கள் பாச மழை பொழிவதும் அட்வைஸ் பண்ணி பிரைன் வாஷ் பண்ண ட்ரை பண்ணுவதும் நடக்க கண்டிப்பாக யாரவது ஒரு நண்பர் சிரிப்பு எமோஜியோடு ”சூப்பர் மச்சி! ஹாப்பி ஜர்னி …ன்னு மெசேஜ்ஜை தட்டி விட அனைவரும் சிரிக்க சாகுறேன்னு சொன்னவர் உட்பட…குரூப் கலகலப்பாக மாறி விடும் இல்லையா….?😆
வன் லைன் ஸ்டோரியாக சொன்னால் முள்ள முள்ளாலதான் எடுக்கணும்! இந்த டெக்னிக் யாரையும் காயப்படுத்தாமல் அவர்களையும் நம்மளையும் நெகட்டிவ்வில் இருந்து பொசிட்டிவ்வாக வைத்திருக்க உதவும்..
இன்னொரு உதாரணம் சொல்றேன் கேளுங்க நண்பா!! என் அண்ணா திடீர்னு நான் செத்துட்டா நீங்க என பண்ணுவீங்க ன்னு கொஞ்சம் சோகமா கேட்டாரு….கொஞ்சம் கூட யோசிக்காமல் உங்க மொபைல்,லப் டாப் ,பாங்கில் இருக்க காசு இதெல்லாம் நானே எடுத்துப்பேன் சிம்பிள் ன்னு சொன்னேன்!! கொஞ்ச நேரம் என் முகத்தை உற்று பார்த்த அண்ணா சத்தமா சிரிச்சுட்டாரு…🤪
அவ்ளோ தான் நண்பா வாழ்க்கை!! ஒருத்தர் நம்ம செத்து போவோம்னு சொன்ன உடனே நம்ம செத்துருவோமா??? இல்லை அவங்க அப்படி சொல்லாம இருந்த மட்டும் நம்ம சாகாமலே பூமியில் வாழ போறோமா?? பிறந்த எல்லாரும் செத்து போவது உறுதி..அப்பறம் எதுக்கு அந்த தேவை இல்லாத டென்க்ஷன் ?? வாழ்க்கையில் நெகடிவ் பொசிட்டிவ் எல்லா விஷயத்துலயும் இருந்தே தீரும்..50 50 ஆப்ஷன் தான் …அந்த 50% நெகட்டிவ்வை கூட இப்படி பொசிட்டிவ்வாக யோசிக்க ஆரம்பிச்சுட்டா வாழ்க்கை 100% பொசிட்டிவாக மாறாத?! 😍
நம் மீது முன் வைக்கப்படும் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் நம்ம முன்ன விட அதிகமாக உழைக்க உத்வேகம் கொடுக்கும் என்பதுதான் உண்மை தெரியுமா? உன்னால இதெல்லாம் முடியாது னு யாராவது சொன்ன ஏன் முடியாது நான் முடிச்சு காட்டுறேன்னு நம்ம மனம் தனக்குள்ளயே சபதம் போடு உத்வேகமாக முயற்சிக்கும். ஆகவே நெகட்டிவ் இனிமேல் நமக்கு நெகட்டிவ் அல்ல பொசிட்டிவ் என் வெற்றி நடை போடலாம் நண்பர்களே 🤩😇