தொடக்கம் மாங்கல்யம்

தந்துனானேனா

பின்பு ஜீவிதம்

துந்தனானேனா…….

சினிமா பாடல்

அமர்க்களமாக ஆரம்பித்து அக்கப்போரில் போய் முடிந்து விடுகிறது இன்று பல திருமணங்கள்.

அம்மி மிதிச்சி அருந்ததி பார்த்து சொந்தமும் பந்தமும் புடை சூழ ஒரு புது உறவை உருவாக்கி வாழ்வின் புது அத்தியாயத்தை தொடங்கி கனவுகளோடு திருமணம் எனும் புது பயணத்தை ஆரம்பிக்கும் இரு மனங்களுக்கு இடையே அன்பு, அரவணைப்பு, ஒற்றுமை, விட்டுக்கொடுத்து போகும் இயல்பு இருந்தால் வாழ்க்கை அமோகமா இருக்கும் என பெரியவங்க சொல்லி கேட்டுருக்கோம்… ஆனால் இன்னைக்கோ லட்ச கணக்குல பணமும்,கிலோ கணக்குல தங்கமும் இதர பல ஆடம்பரமும் கொடுத்து பொண்ண அனுப்பினால் கூட வாழ்க்கை அப்படி அமோகமா இருக்குறது இல்லையே!!!??

வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது

<Wikipedia>

மேலே சொன்னதுதான் வர தட்சணையின் வரைவிலக்கணமாக இருக்கு Wikipedia இல். சாதாரணமாகவே கல்யாணம் என்றதும் இளசுகள் மனதில் ஒரு வித பயம் வருவது இயல்பான விஷயம். அதற்கு நமக்கு முந்திய சந்ததியின் கல்யாண அனுபவங்களும் ஒரு காரணமாக இருக்கும். அதுவும் மீம்ஸ், ஸ்டாண்டப் காமெடி, சினிமாவில் காமெடி சீன்ஸ் அதிலும் முக்கியமாக இப்போது உள்ள ட்ரெண்ட் டிக் டொக் என எல்லாவற்றிலும் கல்யாண வாழ்க்கை தான் அதிகமான கன்டென்ட்டாக இருக்கும். அதுவும் லொக் டவுண் காலங்களில் வீட்டில் முடங்கி இருப்பதை விட வீட்டு வேலைகளை செய்ய வேண்டி இருக்குறதே என்று புலம்பிய ஆண்கள் தான் அதிகம். வாழ்நாள் முழுவதும் வீட்டு வேலைகளை செய்யும் பெண்கள் எவ்வளவு புலம்ப வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் நல்லது. அது ஒரு பக்கம் இருக்கட்டும், நம்ம விஷயத்துக்கு வருவோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் கேரள மாநிலத்தில் வர தட்சணை கொடுமையால் அடுத்து அடுத்து இளம் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. இது முதலும் இல்லை இத்தோடு இது முடிவுக்கு வரும் என்று உறுதி சொல்லவும் யாரும் இல்லை. இதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்து யார் குற்றவாளி என்ன தண்டனை வழங்க வேண்டும் என்ன நடவடிக்கை இது வரை எடுக்கப்பட்டது என்று எல்லாம் நிறைய பேர் பேசிட்டாங்க…பேசிட்டு இருக்காங்க …இனிமேலும் பேசுவாங்க. ஆனால் #Singapenn அதை பற்றி பேச போவதில்லை. ஒரு சில டேட்டாபேஸ்களை அதாவது கேப்டன் விஜயகாந்த் ஸ்டைலில் சொல்ல போறதாக வச்சிக்கோங்களேன்.

வரதட்சணை மரணங்கள் (Dowry deaths) என்பது வரதட்சணைக் கொடுமையால் கணவன் மற்றும் கணவன் வீட்டைச் சார்ந்த உறவினர்களால் துன்புறுத்தலுக்கும் சித்திரவதைக்கும் ஆளாகிக் கொலை செய்யப்பட்ட அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்ட பெண்களின் மரணங்களைக் குறிக்கிறது.

Wikipedia

ஆக பணம் நகை போன்ற ஆடம்பரத்திற்காக திருமணம் என்ற பெயரில் வியாபாரம் செய்வது இல்லை இல்லை கொள்ளை அடிப்பதும் சரியான முறையில் வசூல் ஆகவில்லை என்றால் அதிரடியான நடவடிக்கைகளில் அதாவது சின்ன சின்ன அடி உதையில் ஆரம்பித்து கொலை/ தற்கொலை என்று போய் நிறுத்தப்படுகிறது.இந்த வரதட்சணை என்பது இன்று நேற்று தொடங்கிய வழக்கம் அல்ல அது மட்டும் இல்லாமல் இது நம்ம கலாச்சாரத்தில் மட்டும் இருப்பதும் இல்லை மேலைத்தேய நாடுகளிலும் இருந்த ஒன்னு தான் .ஆனால் பாருங்க நம்ம துரதிஷ்டவசமா இன்னும் அதை பின்பற்றி பலரோட குடும்பங்களை கஷ்டப்படுத்திகிட்டு இருக்கோம். வரதட்சணை ஐரோப்பா, தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.உலகின் சில பகுதிகளில், முக்கியமாக ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் பால்கன் பகுதிகளில் திருமணத் திட்டத்தை ஏற்கும் நிபந்தனையாக அதை பின்பற்றி பலரோட குடும்பங்களை கஷ்டப்படுத்திகிட்டு இருக்கோம். எதிர்பார்க்கப்படுகிறது.

பண்டைய பாபிலோனில் உள்ள ஹம்முராபியின் மன்னனின் போன்ற மிகப் பழமையான பதிவுகளில் கூட, வரதட்சணை ஏற்கனவே இருக்கும் வழக்கம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. மகளுக்கு பொதுவாக அவளுடைய தந்தையின் எந்த சொத்திலும் உரிமை இல்லை. அதற்கு பதிலாக, திருமணத்தில் தனது பெற்றோரிடமிருந்து வரதட்சணை பெற்று வாழ்க்கையை தொடங்குகிறாளாம்.இது அவளது குடும்பத்தால் முடிந்த அளவு வாழ்நாள் பாதுகாப்பை அவளுக்கு வழங்குவதாக இருந்ததாகவும் பதிவுகள் கூறுகிறது.

பழங்கால கிரேக்கத்தில் மணமகளுக்கு விலை கொடுப்பது வழக்கமாக இருந்தது. வரதட்சணை பின்னர் மாற்றப்பட்டது (கிமு 5 ஆம் நூற்றாண்டு). ஒரு கணவனுக்கு மனைவியின் வரதட்சணையில் சில சொத்து உரிமைகள் இருந்தன. கூடுதலாக, மனைவி தனக்கு சொந்தமான திருமணச் சொத்துக்களைக் கொண்டுவரலாம், ஆனால் இது வரதட்சணையில் சேர்க்கப்படவில்லை, இதனால் அந்த பெண் சுதந்திரமாக இருந்தாள். இந்த சொத்து “வரதட்சணைக்கு அப்பாற்பட்டது” மற்றும் இது பரம சொத்து என குறிப்பிடப்படுகிறது.

இந்திய துணைக் கண்டத்தில் வரதட்சணை என்பது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறதாம். ஐயோ நான் சொல்லல…ஆராய்ச்சியாளர்கள் சொல்லறாங்க. காரணம் என்னவென்றால் பண்டைய இந்தியாவில் வரதட்சணை வழக்கம் இல்லை என்று சிலர் சொன்னாலும் இருந்ததாக சிலர் ஆதாரங்களை முன் வைத்து சொல்றாங்க.

இலங்கையில் கூட வரதட்சணை கொடுக்கும் கலாச்சாரம் காணப்படுகிறது, சில குடும்ப வன்முறைகளுக்கும் இது வழிவகுக்கிறது என்றாலும் வரதட்சணையின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. மற்ற தென்னாசிய நாடுகளோடு ஒப்பிடும் போது வரதட்சிணை தொடர்பான வன்முறைகள் குறைவாக இருக்கிறது என்றும் சொல்லலாம். ஆனால் முற்றாக இல்லாமல் போகவில்லை.

2010 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வரதட்சணை மரணங்கள் (8391) இடம் பெற்றுள்ளது. அதாவது கேப்டன் பாணியில் சொன்னால் 100,000 பெண்களில் 1.4 பேர் வரதட்சணை கொடுமையால் மரணமடைந்தனர். பாகிஸ்தானில் பதிவான வரதட்சணை மரணங்களின் எண்ணிக்கை 2000; அது 100,000 பெண்களில் 2.45 பெண்கள் என்ற அளவீடு . மக்கட்தொகைக் கணக்கில் பார்க்கும்போது பாகிஸ்தானில் தான் வரதட்சணை மரணங்களின் விகிதம் அதிகமானதாகவுள்ளதாம்.இதில் வேதனைக்குரிய விஷயம் ஒன்று சொல்லியே ஆக வேண்டும்.பாகிஸ்தானில் அனைத்து வரதட்சணை மரணங்களும் அலுவலர்களால் பதிவு செய்யப்படுவதில்லையென்றும் பதிவுக் கணக்கில் வரும் மரணங்களின் எண்ணிக்கையைவிட உண்மையான எண்ணிக்கை அதிகமானதாகும் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது பாகிஸ்தானில் என்று இல்லை பொதுவாக எல்லா நாடுகளிலும் நடப்பது தானே! பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் எல்லாமே பதியப்படுகிறதா என்ன ?? இல்லையே!! சில குடும்பங்கள் தமது கௌரவதைக் காப்பாற்றிக் கொள்ளவும்,சிலர் குடும்பத்தில் இருக்கும் மற்ற உயிர்களை பாதுகாக்கவும் தங்கள் வீட்டு பெண்ணுக்கு நடந்த கொடுமையை மறைத்து வாழ முயற்சிப்பதும் உண்டு. அதிகாரம் பணம் பதவி என எல்லாமே இந்த மாதிரி விஷயத்தில் தலையிட்டு எளிய மக்களை(பாதிக்கப்பட்ட) ஏய்த்து வாழ நினைப்பதும் அது அப்படியே நடப்பதும் வழக்கம்தானே!. இவற்றை மீறி வெளி உலகத்துக்கு வரும் சம்பவங்களில் சரியான நீதி எத்தனை பேருக்கு கிடைக்கிறது என்பதும் இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை,பன்னாட்டு மன்னிப்பு அவை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் என பல அமைப்புகள் பெண்களுக்கு எதிரான இது போன்ற வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுத்த வண்ணமே உள்ளது.சர்வேதச அமைப்புகள் என்னதான் சட்டங்களையும் நியாயங்களையும் கொண்டு வந்தாலும் உள்நாட்டு சட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் வரை இது எதையும் குறைக்கவோ தடுக்கவோ முடியாது என்பது தான் கசப்பான உண்மை.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s