Episode 5
நம் திறமையை உணர்ந்து, நம் கனவை அறிந்து அதை ஊக்குவிக்கும் குடும்பமும் சுற்றமும் கிடைப்பது பெண்களுக்கு வரம். அந்த வகையில் #பூங்கொடி அதிர்ஷ்டசாலிதான். ஊரார் என்ன சொன்னாலும் மணியின் காதில் அவை எதுவுமே நுழையவில்லை. அவரால் முடிந்தவரை தன் மகளை ஆதரித்து சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனை ஆக வேண்டும் என்ற அவளது கனவை அவரும் ஊக்குவித்து வந்தார். மொத்த கிராமமும் தமது பிற்போக்கு எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் நாள் வந்தது.
நகரத்து பாடசாலைகள் அதிகம் பங்கு பெறும் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள அம்முறை #பூஞ்சோலை பாடசாலைக்கும் அழைப்பு வந்திருந்தது. தலைமை ஆசிரியர்க்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம். இதெல்லாமே பாரிவேந்தனின் ஏற்பாடு. அந்த சின்ன பாடசாலையில் பூங்கொடியின் திறமை கண்டு வியந்து போன அவர் அவளுக்கு எதாவது முறையில் உதவ வேண்டும் என்று யோசிக்கும் போதுதான் நகர பாடசாலையில் படிக்கும் அவரது மகள் மூலம் போட்டிகள் பற்றி அறிந்து அதற்கான அழைப்பு #பூஞ்சோலை கிராமத்துக்கு வருவதற்கான வேலைகளை செவ்வனே செய்து முடித்தார்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாராகியது. அந்த பாடசாலை சார்பாக #பூங்கொடி உட்பட 5 மாணவர்கள் 100m ஓட்டப் போட்டி, நீளம் பாய்தல் மற்றும் ஈட்டி எறிதல் என்ற 3 போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டார்கள்.
தொடரும்…..