அவளிடம் ஒரு நிமிடம்

கண்ணை பார்த்து பேசுகையில் கழுத்துக்கு கீழ் நீளும் பார்வைகளை அவள் எவ்வாறு தடுப்பாள்?.....உடைகளின் சரிவுகளில் உடல் வளைவுகளில் வழுக்கும் எண்ணங்களை அவள் எவ்வாறு நிறுத்துவாள்?.....உணர்வுகளை விட உடலுக்கு முக்கியம் கொடுக்கும் உறவுகளுக்கு அவள் எவ்வாறு புரிய வைப்பாள்?.....அவளது சாதனைகளை சமையலறைக்குள் முடக்கி விட துடிக்கும் ஆளுமைகளுக்கு அவள் எவ்வாறு பதில் கொடுப்பாள்?....ஆழ நினைக்கும் அவளை அழ வைத்து பார்க்கும் சமூகத்தை அவள் எவ்வாறு மாற்றுவாள்?.....எவ்வாறு எவ்வாறு எவ்வாறு??? -அவளிடம் ஒரு நிமிடம்-நீ பூவின் வடிவில் வளரும் புயல்…எரிக்கும் … Continue reading அவளிடம் ஒரு நிமிடம்

அவள் இல்லை அவள் !!

உதடுகளை உத்து ரசிக்கையில் அவை சொல்ல துடிக்கும் வார்த்தைகளை புரிந்து கொள்ளுங்கள்!மார்பகங்களை மயங்கி பார்க்கையில் அதன் உள்ளிருக்கும் மனதை நேசியுங்கள்!சேலை ஓரம் தெரியும் இடை வளைவுகளில் வழுக்க நினைக்கையில் மாதம் மூன்று அதன் வலி உணருங்கள்!நெரிசலில் உரசி இன்புறுகையில் குடும்பத்தை காக்க ஒழுகும் வியர்வையின் பெறுமதி அறியுங்கள்!அங்கங்களை அங்குலம் அங்குலமாக வர்ணித்து கவிக்கு சுவைக் கொடுக்கும் வெறும் அடைமொழியாக அவளை பார்க்காதீர்கள் !வேதங்களும் சாஸ்திரங்களும் காணாத வண்மை அவள் மொழியில் உண்டு!சரித்திரங்களிலும் இதிகாசங்களிலும் கடந்து போன உறுதி … Continue reading அவள் இல்லை அவள் !!

உலகில் அவள் ஒரு மூலையில்…….

கனவு எனும் கயிறு அருந்த காத்தாடியாகஅவள் ஒரு மூலையில்.....தேவை தீர்ந்ததும் கசக்கி வீசப்பட்ட காகிதமாகஅவள் ஒரு மூலையில்.....சில புலிகளின் பசிக்கு இரையாகஅவள் மறு மூலையில்.....சிதைவுகளின் சின்னமாகஅவள் வேறு ஒரு மூலையில்....கண்ணீர் கடலில் மூழ்கிய கப்பலாகஅவள் இன்னும் ஒரு மூலையில்.....கட்டுப்பாடு எனும் கடப்பாட்டுக்குள் மாட்டியஅவள் ஒரு மூலையில்......சம்பிரதாயம் எனும் சுனாமியில் சிக்கியஅவள் எதோ ஒரு மூலையில்.......சிறுவர் திருமணம் எனும் சிறை கைதியாகஅவள் எதோ ஒரு மூலையில்.......திருமணம் எனும் திணிக்கப்பட்ட தீவனத்திற்கு மாடாகஅவள் எங்கோ ஒரு மூலையில்.......பந்தங்களின் நிர்பந்தத்தில் மாட்டிக் … Continue reading உலகில் அவள் ஒரு மூலையில்…….

அவள் இன்றி அணுவும் அசையாது!……

கார்ட்டூனிலும் படங்களிலும் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும் அவர்கள் உலகத்தை காப்பாற்றி சாதனைகள் செய்வதாக காட்டப்பட்டாலும் நிஜ வாழ்வில் நம் வீட்டு பெண்கள்தான் சூப்பர் ஹீரோ. ஸ்பைடர்மேன்,சூப்பர்மேன் மட்டுமல்ல வேறு யாராலும் செய்ய முடியாத எவ்வளவோ வேலைகளை எந்தவித சிரமமும் பாராமல் செய்து முடிக்க அவளால்தான் முடிகிறது என்றால் அப்போ "அவள்" தானே சூப்பர்ஹீரோ! அதிகாலையில் ஒரு வீட்டில் முதலாவதாக எழுவதும், இரவில் கடைசியாக தூங்குவதும் அவளாகத்தான் இருக்கும். வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் "அவளுடைய" … Continue reading அவள் இன்றி அணுவும் அசையாது!……