முழுமையாய் பிறந்ததாலோ அவஸ்தை? 🤔

கூனாய் பிறந்திருந்தால்உங்களை எதிர்த்துநின்றிருக்க மாட்டேன்!குருடாய் பிறந்திருந்தால்உங்கள் பாரபட்சங்களைகண்டிருக்க மாட்டேன்!செவிடாய் பிறந்திருந்தால்உங்கள் ஏச்சுப்பேச்சுகளைகேட்டிருக்க மாட்டேன்!ஊமையாய் பிறந்திருந்தால்உங்களிடம் எதிர்த்துப்பேசியிருக்க மாட்டேன்!பேதையாய் பிறந்திருந்தால்என் கோபதாபங்களை உணர்ந்துவெளிகாட்டியிருக்க மாட்டேன்!முட்டாளாய் பிறந்திருந்தால்உங்கள் தவறுகளைஅறிந்திருக்க மாட்டேன்!ஐயகோ!!!நானோ ஆறறிவும்முழுதாய் பெற்ற முழு மனிதி அல்லவா!?!அதனால்தானோ இத்தனைஅவஸ்தைகள் பூமியிலே???😣😣~ Moni ~

covid19 நிரூபிக்கும் பெண் ஆளுமைகள்!

ஒட்டுமொத்த உலகமும் ஒத்த வைரஸுக்கு அடங்கி #lockdown செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் நாடுநகரம் எல்லாம் முடங்கி போன நிலையிலும் நீயா? நானா? எனப் போட்டிப் போட்டுக் கொண்டும் வாதம் செய்துக் கொண்டும் இருக்கும் நம்ம அரசியல்வாதிகளின் மத்தியில் மக்களுக்காக உண்மையாக செயற்படும் மக்களின் தலைவர்களும் அரச அதிகாரிகளும் யார் யாரு என்பதை நாம் அறிந்துக் கொண்டு வருகிறோம். மேலும் மக்கள் தற்போதுள்ள நிலையில் தமது தலைவர்களிடம் இருந்து இரக்கம்,வலிமையான சுகாதார திட்டங்கள் மற்றும் ஆதரவளிக்கும் தன்மை என்பதையே அதிகம் … Continue reading covid19 நிரூபிக்கும் பெண் ஆளுமைகள்!