16 வயதினிலே….

Episode 4 மறுமணம் என்பது ஆணுக்கு மட்டுமே உகந்தது என்று நம்பும் சில ஜீவன்கள் இன்றும் வாழத்தான் செய்கிறது. ஊரார் எவ்வளவு சொல்லியும் மணி மறுமணம் செய்ய ஒத்துக் கொள்ளவே இல்லை. பார்வதியின் நினைவிலே தன் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். காற்றிலே கற்பூரம் கரைவது போல காலம் கரைந்து ஓடியது.சேகர், ராஜன், பூங்கொடி மூவரும் அன்பிலும் பண்பிலும் சிறந்தவர்களாக வளர்ந்தனர். தந்தை சொல்ல மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்து … Continue reading 16 வயதினிலே….

முழுமையாய் பிறந்ததாலோ அவஸ்தை? 🤔

கூனாய் பிறந்திருந்தால்உங்களை எதிர்த்துநின்றிருக்க மாட்டேன்!குருடாய் பிறந்திருந்தால்உங்கள் பாரபட்சங்களைகண்டிருக்க மாட்டேன்!செவிடாய் பிறந்திருந்தால்உங்கள் ஏச்சுப்பேச்சுகளைகேட்டிருக்க மாட்டேன்!ஊமையாய் பிறந்திருந்தால்உங்களிடம் எதிர்த்துப்பேசியிருக்க மாட்டேன்!பேதையாய் பிறந்திருந்தால்என் கோபதாபங்களை உணர்ந்துவெளிகாட்டியிருக்க மாட்டேன்!முட்டாளாய் பிறந்திருந்தால்உங்கள் தவறுகளைஅறிந்திருக்க மாட்டேன்!ஐயகோ!!!நானோ ஆறறிவும்முழுதாய் பெற்ற முழு மனிதி அல்லவா!?!அதனால்தானோ இத்தனைஅவஸ்தைகள் பூமியிலே???😣😣~ Moni ~

என்று தீரும் எங்கள் சோகம்……

பெண்கள் நாட்டின் கண்கள் எனக் கூறி கூறியே அந்த கண்ணிலே குத்தி கொண்டு இருக்கிறது இந்த சமூகம். சொத்து உரிமை, கல்வி உரிமை எல்லா துறைகளிலும் இன்று பெண் கால்தடம் பதித்து சாதிக்கும் வாய்ப்பையும் இந்த சமூகம் தானே தந்தது என்று நீங்கள் நினைக்கலாம். இவ்வளவும் தந்து பெண்கள் எங்கள் கண்கள் என மார்த்தட்டிக் கொள்ளும் என் சமுகமே…….இதை எல்லாம் தந்து விட்டு இவற்றை அனுபவிக்க கொஞ்சம் சுதந்திரம் தந்துள்ளதா??… அதுவும் வேண்டாம் ஒரு பெண் பிறந்து … Continue reading என்று தீரும் எங்கள் சோகம்……

ஆண்களுக்கு தடை!!!

காட்டுக்கே ராஜா ஆண் சிங்கம் தான் என்றாலும் கூட அது வேட்டைக்கு செல்வதில்லை. குகைக்குள் மட்டுமே அடங்கி போகிறது அதன் வீரம்.பெண் சிங்கம் தான் அலைந்து திரிந்து வேட்டையாடி உண்ண கொடுக்கும் ஆண் சிங்கத்துக்கே.எல்லா விலங்கிலும் ஆணை விட பெண் விலங்கிற்கு வேட்டை திறன் அதிகம். மோப்பசக்தி,செவி கூர்மை,பார்வை கூர்மை, சுவை உணர்ச்சி என்பன பெண்ணுக்கு இயற்கையாகவே அதிகம். மனிதனிலும் இதுவே பொது விதி. அதனால் ஆதி கால மானுடர்களில் பெண்கள் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள். மக்கள் … Continue reading ஆண்களுக்கு தடை!!!

சாதகமாகிய covid 19!…

உலகில் 4,909,136 மக்கள் பாதிப்பு, 320,434 உயிரிழப்புகள் 1,917,4140 பேர் சுகமடைந்துள்ளனர்.(இந்த கட்டுரை எழுதும் போது). நாடுநகரங்கள் முடக்கம்,பொருளாதார வீழ்ச்சி,பணவீக்கம்,பொது மக்களின் அன்றாட வாழ்க்கை தடைப்பட்டு போயுள்ளது,சில நாடுகளில் மக்கள் வேலைகளை இழந்துள்ளனர்.இப்படி COVID19 தாக்குதல் பட்டியல் நீளுகிறது.பல நாடுகள் மாத கணக்கில் #lockdown செய்யப்பட்டு மக்கள் வீட்டுக்குளேயே முடங்கி இருக்க,நாட்டுத் தலைவர்கள் என்ன செய்வது?எதை செய்வது? என்று தெரியாமல் திணறி நிற்க,நவீன மருத்துவதையே ஆட்டம் காண செய்து வருகிறது COVID19. எனினும் தற்போதைய நிலையில் சில … Continue reading சாதகமாகிய covid 19!…