கண்ணை பார்த்து பேசுகையில் கழுத்துக்கு கீழ் நீளும் பார்வைகளை அவள் எவ்வாறு தடுப்பாள்?.....உடைகளின் சரிவுகளில் உடல் வளைவுகளில் வழுக்கும் எண்ணங்களை அவள் எவ்வாறு நிறுத்துவாள்?.....உணர்வுகளை விட உடலுக்கு முக்கியம் கொடுக்கும் உறவுகளுக்கு அவள் எவ்வாறு புரிய வைப்பாள்?.....அவளது சாதனைகளை சமையலறைக்குள் முடக்கி விட துடிக்கும் ஆளுமைகளுக்கு அவள் எவ்வாறு பதில் கொடுப்பாள்?....ஆழ நினைக்கும் அவளை அழ வைத்து பார்க்கும் சமூகத்தை அவள் எவ்வாறு மாற்றுவாள்?.....எவ்வாறு எவ்வாறு எவ்வாறு??? -அவளிடம் ஒரு நிமிடம்-நீ பூவின் வடிவில் வளரும் புயல்…எரிக்கும் … Continue reading அவளிடம் ஒரு நிமிடம்
அவள் இல்லை அவள் !!
உதடுகளை உத்து ரசிக்கையில் அவை சொல்ல துடிக்கும் வார்த்தைகளை புரிந்து கொள்ளுங்கள்!மார்பகங்களை மயங்கி பார்க்கையில் அதன் உள்ளிருக்கும் மனதை நேசியுங்கள்!சேலை ஓரம் தெரியும் இடை வளைவுகளில் வழுக்க நினைக்கையில் மாதம் மூன்று அதன் வலி உணருங்கள்!நெரிசலில் உரசி இன்புறுகையில் குடும்பத்தை காக்க ஒழுகும் வியர்வையின் பெறுமதி அறியுங்கள்!அங்கங்களை அங்குலம் அங்குலமாக வர்ணித்து கவிக்கு சுவைக் கொடுக்கும் வெறும் அடைமொழியாக அவளை பார்க்காதீர்கள் !வேதங்களும் சாஸ்திரங்களும் காணாத வண்மை அவள் மொழியில் உண்டு!சரித்திரங்களிலும் இதிகாசங்களிலும் கடந்து போன உறுதி … Continue reading அவள் இல்லை அவள் !!
You must be logged in to post a comment.