அவளிடம் ஒரு நிமிடம்

கண்ணை பார்த்து பேசுகையில் கழுத்துக்கு கீழ் நீளும் பார்வைகளை அவள் எவ்வாறு தடுப்பாள்?.....உடைகளின் சரிவுகளில் உடல் வளைவுகளில் வழுக்கும் எண்ணங்களை அவள் எவ்வாறு நிறுத்துவாள்?.....உணர்வுகளை விட உடலுக்கு முக்கியம் கொடுக்கும் உறவுகளுக்கு அவள் எவ்வாறு புரிய வைப்பாள்?.....அவளது சாதனைகளை சமையலறைக்குள் முடக்கி விட துடிக்கும் ஆளுமைகளுக்கு அவள் எவ்வாறு பதில் கொடுப்பாள்?....ஆழ நினைக்கும் அவளை அழ வைத்து பார்க்கும் சமூகத்தை அவள் எவ்வாறு மாற்றுவாள்?.....எவ்வாறு எவ்வாறு எவ்வாறு??? -அவளிடம் ஒரு நிமிடம்-நீ பூவின் வடிவில் வளரும் புயல்…எரிக்கும் … Continue reading அவளிடம் ஒரு நிமிடம்

முழுமையாய் பிறந்ததாலோ அவஸ்தை? 🤔

கூனாய் பிறந்திருந்தால்உங்களை எதிர்த்துநின்றிருக்க மாட்டேன்!குருடாய் பிறந்திருந்தால்உங்கள் பாரபட்சங்களைகண்டிருக்க மாட்டேன்!செவிடாய் பிறந்திருந்தால்உங்கள் ஏச்சுப்பேச்சுகளைகேட்டிருக்க மாட்டேன்!ஊமையாய் பிறந்திருந்தால்உங்களிடம் எதிர்த்துப்பேசியிருக்க மாட்டேன்!பேதையாய் பிறந்திருந்தால்என் கோபதாபங்களை உணர்ந்துவெளிகாட்டியிருக்க மாட்டேன்!முட்டாளாய் பிறந்திருந்தால்உங்கள் தவறுகளைஅறிந்திருக்க மாட்டேன்!ஐயகோ!!!நானோ ஆறறிவும்முழுதாய் பெற்ற முழு மனிதி அல்லவா!?!அதனால்தானோ இத்தனைஅவஸ்தைகள் பூமியிலே???😣😣~ Moni ~