Mother’s day!

கை எடுத்து கும்பிடுற சாமி இருக்கிற இடம் தான் கருவறை. ஆனால் அந்த கருவறையையே தனக்குள் சுமக்கிற நம்ம அம்மா தானே நம்ம வணங்க வேண்டிய சாமி?……. வருடந்தோறும் மே மாதம் 2ஆவது ஞாயிறு உலக அன்னையர் தினம். கருவில் உருவான ஒரு சிறு உருண்டைக்கு உயிர் கொடுத்து 10 மாதம் தன்னுள் சுமந்து கவிழ்ந்து படுத்தா கலைஞ்சிப் போயிருமோ…..? கடுமையான வேலை செய்தால் கலைஞ்சிப் போயிருமோ…..? குங்குமப்பூ சாப்பிட்டால் செவப்பா பிறக்குமா?…. தக்காளி சாப்பிட்டால் தக தகன்னு வருமோனு?…. இப்படி அவள் அறிவுக்கு எட்டின மாதிரி நெனச்சி நெனச்சி பார்த்து பார்த்து செதுக்கி பொறுமையோடும் வலியோடும் போராடி அந்த உருவம் உலக பார்க்க அவள் அறிஞ்ச அனைத்து சாமியையும் கும்பிட்டு எமனோட மல்லுக்கட்டி உலகத்தை பார்க்க வைச்சிருவா…..அதோட முடிஞ்சி போகல அவளோட போராட்டம். உயிர் கொடுத்து உரு கொடுத்தவள் இப்போ உதிரத்தை உருக்கி உணவு கொடுப்பாள். இராப்பகல் பார்க்காமல் இப்பவும் கடுமையாக போராடுவாள் நம்ம வளர்க்க….
“கர்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா…பேதை போல் அவள் இருப்பால் மேதையாய் உன்னை வளர்ப்பா”
S.J.சூர்யாவின் வியாபாரி பட பாடலில் உள்ள வரிகளை போல
இந்த சமூகத்தில் நாம் உயர்ந்த நிலைக்கு வர நம்மள பெத்த தாயின் உழைப்பு ரொம்ப முக்கியமானதாகும். இவ்வளவும் பண்ற அம்மாக்கு நம்ம என்ன பண்றோம்….? அது வேற டோபிக். ஆனால் அந்த அம்மாவை கொண்டாட வெள்ளைக்காரன் கொண்டு வந்தது தான் இந்த அன்னையர் தினம்.அதை தான் நம்ம இப்போ ரொம்ப க்ராண்டா சோஷியல் மீடியா முழுக்க கொண்டாடிட்டு இருக்கிறோம் நண்பர்களே!
எப்படி? எங்கு?
1908ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சமாதான சேவையாளரான ஆன் ஜார்விஸ் தன்னுடைய இறந்து போன அம்மாவின் நினைவு நாளை வெஸ்ட் விர்ஜினியா,கிராப்டனில் உள்ள சென் ஆன்ருஸ் சர்ச்சில் அன்னையர் தினமாக கொண்டாடினர். இதற்கான 1905இலிருந்தே ஆரம்பித்திருந்தார் ஆன். அதே வருடம் அவரது அம்மா இறந்து போக தனது அம்மாவின் இறந்த நாளையே அன்னையர் தினமாக மாற்ற முயற்சிகளை செய்து வந்தார்.உலகிலுள்ள அனைத்து அம்மாக்களையும் கௌரவிக்க வேண்டும் என்பதே ஆனின் ஒரே எண்ணமாக இருந்தது.அவரது தொடர் முயற்சிகளால் 1911 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் mother’s day கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.1914 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 28ஆவது ஜனாதிபதியான வூட்று வில்ஸன் மே மாதம் 2ஆவது ஞாயிறு mother’s day ஆகவும் அன்று அமெரிக்காவில் தேசிய விடுமுறையாகவும் அறிவித்து ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டார்.இது தான் நண்பர்களே இன்றைய mother’s day வரலாறு.
ஏன்?
“நின்றாலும் எங்கு சென்றாலும் எப்போதும் எது செய்தாலும் எந்நாளும் உன் அன்பு வந்தென்னைக் காக்கும்…….”
என்ற தளபதி விஜயின் பட பாடல் வரிகளின் படி
நம்ம அமெரிக்காவில் வேலை செஞ்சாலும் சரி அடுத்த தெருவில் இருந்தாலும் சரி நம்ம நினைக்கிறோமோ இல்லையோ முப்பொழுதும் நம்மள பற்றிய எண்ணங்கள் தான் நம் அம்மாவின் மூச்சில் கலந்து இருக்கும். அந்த அம்மாவை கொண்டாட தான் இந்த நாள் அறிமுகமானது.இது வெறும் கொண்டாட்டம் மட்டும் இல்லை நண்பர்களே அந்த தெய்வத்தை கௌரவிக்க,மரியாதையை செலுத்த, அவளது ஒவ்வொரு தியாகமும் உழைப்பும் என்றுமே நமக்கு ஞாபகம் இருக்கும் என்று அம்மாவுக்கு சொல்ல ஒரு வாய்ப்பு.
Doubt! Doubt!
ஆனால் அதில் எனக்கு 2 சந்தேகம் இருக்கு நண்பர்களே…… உண்மையாகவே நம்ம எல்லோரும் இந்த மதர்ஸ் டே கொண்டாடுவதற்கான சரியான காரணத்தை புரிஞ்சி அதுக்கு ஏற்றால் போல தான் செலிபிரேட் பண்றோமா? அடுத்தது இந்த ஒரு போதுமா அதுக்கு?…
முதல் சந்தேகத்திற்கான காரணமே நம்மள சுத்தி இருக்க டெக்னாலஜி. அது கரெக்டா தான் இருக்கு. அனால் நம்ம அதை பாவிக்கிற விதம் தான் கொஞ்சம் சரி இல்லயோன்னு தோணுது….அது எப்படினு சொன்னா நம்முள் வருகிற எல்லா உணர்வுகளையும் ஆன்லைனில் பகிர்ந்து கொள்கிற நம்ம உடன் இருக்கிற உறவுகள் மீதான அன்பையும் அங்க தான் சொல்லிட்டு இருக்கிறோம். இது பலராலும் மறுக்க முடியாத உண்மை. பேஸ்புக்,டுவிட்டர்,இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியா தான் நாம் அதிகம் அன்பை சொல்லும் இடமாக மாறி உள்ளது. தூரமாக இருக்கும் உறவுகளை பக்கத்துல கொண்டு வரவும் புது நட்பு வட்டத்தை உருவாக்கவும் கொண்டு வரபட்டது தானே இதெல்லாம். ஆனால் நம்ம என்ன செஞ்சிட்டு இருக்கோம்?? பக்கத்துலயே இருக்க உறவுகளுக்கு ஆன்லைனில் அன்பை சொல்லிட்டு இருக்கோம்…முக்கியமாக பிறந்தநாள்,கல்யாண நாள்,friendship day , இவ்வளவு ஏன் காதலர் தின வாழ்த்துக்கள் கூட இப்போ ஆன்லைனில் தானே சொல்றோம் அதிகமாக……அன்னையர் தினமாக இருந்தாலும் அம்மாக்கே பிறந்த நாளா இருந்தாலும் சரி அம்மாவோட எடிட் செய்த போட்டோவை அப்லோட் செய்து loving mummy ! world best mom இப்படியெல்லாம் அழகு வசனம் சேர்த்து போஸ்ட் போட்டுட்டு நம்ம அம்மாவுக்கு வாழ்த்து சொல்லிட்டோம் சூப்பரா இருக்கு அப்படினு நம்மளே சொல்லிட்டு எத்தனை likes எத்தனை shares வருதுன்னு எண்ணிக்கிட்டு இருப்போம். இதுல வேடிக்கை என்ன தெரியுமா நண்பர்களே?!…. நம்மில் பலரோட அம்மாக்கு எந்த சோஷியல் மீடியா அக்கவுண்ட்டும் இருக்காது. அப்புறம் யாருக்கு அங்க வாழ்த்து சொன்னிங்க….. தொழில்நுட்பமயமான இந்த உலகத்துல பக்கத்துல இருக்க அம்மாவுக்கே ஆன்லைன்ல வாழ்த்து சொல்ற காலமாக மாறி போச்சு இல்லையா?….. இந்த அன்னையர் தினத்துல இருந்து நம்மை நாமே மாற்றிப்போம். காலையிலே அம்மாகிட்ட போய் happy mother’s day அம்மா அப்படினு சொல்லி உங்களால முடிஞ்சா ஒரு கிப்ட் அது சின்னதோ பெருசோ குடுத்து பாருங்க அத விட பெரிய சந்தோஷம் நம்ம அம்மாக்கு வேற ஏதும் இருக்குமா என்ன?… ஆன்லைனில் சொல்லற வாழ்த்தும் போட்ட போஸ்ட்டும் நம்மக்கு likes, shares அள்ளி தருமோ இல்லையோ ஆனால் நிச்சயமா அம்மாகிட்ட சொன்ன வாழ்த்து அவங்களுக்கு மிக பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் நண்பர்களே! அதுக்கு அப்புறமா அம்மா கூட ஒரு செல்பி எடுத்து அதை போஸ்ட் பண்ணிக் கொள்ளலாம் நண்பர்களே. இனி நம்ம அன்பை ஆன்லைன்ல அல்ல நேரடியாகவே வெளிக்காட்டுவோம்.
அடுத்த சந்தேகம் ஒரு நாள் இந்த ஒரே ஒரு நாள் போதுமா நம்ம அம்மாவை பாராட்ட ? அவங்களோட தியாகத்தையும் உழைப்பையும் நினைவுக் கொள்ள? கௌரவிக்க? நிச்சயமா இல்லை. ஒரு காலமும் இல்லை.”ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா……” என்ற பாடல் தான் நினைவில் வந்து போகுது. கருவில் வந்த நாள் முதல் கடைசி மூச்சு வரை நெஞ்சிக்குள் வைத்து சுமந்து வாழும் அம்மாவை நம்ம வாழ் நாள் முழுக்க போற்றனும் இல்லையா நண்பர்களே?…. அவளது தியாகங்கள் ஒவ்வொரு நாளும் மதிக்க பட வேண்டியவை இல்லையா…..? ஒவ்வொரு நாளும் அங்கீகரிக்கப்பட வேண்டியவை இல்லையா?….. அப்படி ஒவ்வொரு நாளும் கொண்டாட பட வேண்டிய நம்ம அம்மாவை mother’s day அன்று மட்டும் வாழ்த்தினால் போதுமா என்ன?…. அடுக்காக ஒவ்வொரு நாளும் கொண்டாட முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்குள் வரலாம். ஒவ்வொரு நாளும் கிப்ட் வாங்க முடியுமான்னு நீங்க நினைக்கலாம்.நான் அதை சொல்லல நண்பர்களே. எப்பவும் நம்ம நினைப்பில் இருக்க அம்மாக்கு நாமாகும் அவங்க மேல அக்கறை இருக்குது,அவங்களோட நலன் நம்மக்கு முக்கியமானது,இந்த உலகத்தின் உயர்ந்த அம்மா அவங்க தான் அப்படிகிறதையும். அவங்களோட ஒவ்வொரு செயலும் நம்ம அங்கீகரிக்கிறோம் அப்படினு அவங்களுக்கு வெளிக்காட்டுவோம்.எந்த காரணத்துக்காகவும் அவங்க மனசு நொந்து போற மாதிரி நடந்துக்காம இருக்கனும் நண்பர்களே.. அவங்க சொல் கேட்டு நாடாகும் பிள்ளையாக நம்ம இருந்தாலே எல்லா அம்மாக்களுக்கும் ஒவ்வொரு நாளும் mother ‘s day தான் அன்பை பரிமாறி அம்மாவை கொண்டாடுவோம் நண்பர்களே!….
“பாசம் சொல்லி கொடுக்க
பள்ளி கூடம் தேவையா…..
பாதி வயிறு பட்டினி இருந்து
பண்பாகவும் பாதுகாப்பாகவும்
பார்த்துக் கொள்ளும் அம்மா இருக்கையிலே……!”
-மோகனா-

Tell your mom’s love here!😍
LikeLike