நம்மை நாமே போட்டோ எடுத்து ரசித்துக் கொள்ள வந்ததுதான் செல்பி.இன்றைய நாளில் செல்பி எடுக்க தெரியாத எடுக்காத ஆளே இல்லை எனலாம்.அந்த அளவிற்கு செல்பி நமக்குள் ஒன்றாகி விட்டது. நின்றாள் செல்பி,நடந்தால் செல்பி,அவுட்டிங் போகும் போதெல்லாம் ஒவ்வொரு இடத்திலும் செல்பி,கல்யாண வீடு,பர்த் டே பார்ட்டி,இவ்வளவு ஏன் செத்த வீட்டில் செல்பி எடுக்கும் நல்ல ஜீவன்களும் நம்மில் இருக்கிறார்கள்.இன்னும் சிலர் சோஷியல் மீடியா லைக்ஸ்க்காக ரிஸ்க் எடுத்து செல்பி எடுப்பதும் உண்டு தானே!? அதெல்லாம் இருக்கட்டும் இப்படி செல்பி மோகம் நம்மை கட்டி ஆழ்கிறதே இது ஒரு உளவியல் பிரச்சனை தெரியுமா?…
செல்பிக்களை கிளிக்கி தள்ளுவது அவ்வளவு நல்ல விடயம் அல்ல என்கிறார்கள் உளவியலாளர்கள்.அதிகமாக செல்பி எடுக்கும் பழக்கம் நம்மை அதுக்கு அடிமை ஆக்கிவிடுகிறதாம்.இது உண்மை தானே நண்பர்களே!உயிரை பணயம் வைத்து செல்பி எடுத்த கதைகளும் அப்படி செல்பி எடுக்க சென்று உயிர் போன சம்பவங்களும் நாம் கடந்த காலங்களில் கேட்டும் பார்த்தும் இருக்கிறோமே! அதுமட்டுமல்ல இதனால் வேறுபட்ட மனநல பாதிப்புகள் ஏற்படுகிறது.உதாரணமாக அழகு சம்பந்தமான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். நம்மில் எத்தனை பேர் செல்பி எடுத்து எடுத்து “இது நல்லா இல்லை வேறு ஒன்னு எடுத்துக் பார்க்கலாம்” என்று எடுத்த போட்டோவை டெலிட் செய்து திரும்ப திரும்ப எடுப்போம்.ஆக அப்படி செய்வது எடுத்த செல்பி அழகாக இல்லை என்றா?? இல்லையே அதில் தெரியும் நம் முகம் அழகாக இல்லை என்று தானே?
முக்கியமான விடயம் என்ன தெரியுமா நண்பர்களே… ஒரு நாளைக்கு மூன்றுக்கு அதிகமான செல்பிகளை கிளுக்கித் தள்ளுபவர்கள் இந்த மனநல பாதிப்புக்கு ஆளாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகவே இனி செல்பிகளை கிளிக்கி லைக்ஸ் தேடும் முன்னர் நமக்கு வரும் ஆபத்தை கொஞ்சம் யோசிங்க!