16 வயதினிலே..

Episode 2

அழகிய பூஞ்சோலையும் அதற்கு விதிவிலக்கல்ல. “பாரிவேந்தன்” அந்த கிராமத்தில் பெரிய தலைக்கட்டு. ஜமீன் பரம்பரை. முருக்கு மீசை, புலி பல் சங்கிலி, பகட்டான உடை, பந்தாவாக நடை என்று இல்லாமல் நடை, உடை, பண்பு என எல்லாவற்றிலும் எளிமையையும் பொறுமையையும் கொண்டவர். உதவி என்று வரும் ஊர் மக்களுக்கு எந்த பாகுபாடும் இல்லாமல் உதவி செய்பவர். பெயருக்கு ஏற்றாற் போன்ற குணம்.

“பூங்கொடி” பூஞ்சோலையில் வளரும் லேடி உசைன் போல்ட். 16 வயதாகும் அவள் தாயை இழந்த குடும்பத்தின் ஒரே பெண் பிள்ளை. பூங்கொடியின் தந்தை “மணி” சந்தையில் பூ வியாபாரம் செய்து தன் மூன்று பிள்ளைகளையும் வளர்த்தார். பூங்கொடியின் இரண்டு அண்ணன்களும் கிராமத்து பள்ளியில் படித்து விட்டு மூத்தவன் “சேகர்” பாரிவேந்தனின் தோட்டத்தில் வேலை செய்ய இளையவன் “ராஜன்” அப்பாவோடு சந்தையில் வேலை செய்கிறான்.ஆனால் பூங்கொடியோ நகரத்து பள்ளியில் படிப்பதோடு பல ஓட்டப்போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றிகளை பெற்று வருகிறாள். அந்த நகரத்து பள்ளியில் அவளுடன் படிக்கும் மற்ற பிள்ளைகள் கோச்சிங் ட்ரைனிங் என போகும் போதும் குடும்ப சூழ்நிலை காரணமாக தன் கிராமத்தின் காடு மேடுகளில் ஓடி தனக்கு தானே ட்ரைனிங் குடுத்து கொள்கிறாள் பூங்கொடி.

தொடரும்……

Leave a comment